பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பயணி எண்ணிக்கை குறைந்தது

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், ரயில் மூலம் மாநிலத்துக்குள் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருப்பூரில் இருந்து காட்பாடி, சேலம், சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் நாகர்கோவில் ரயில்களில்

திருப்பூர் : கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், ரயில் மூலம் மாநிலத்துக்குள் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

திருப்பூரில் இருந்து காட்பாடி, சேலம், சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் நாகர்கோவில் ரயில்களில் முன்பதிவுக்கு காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். கடந்த பத்து நாட்களாக மாநிலத்துக்குள், அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.திருப்பூர் - ஈரோடு - கோவை இடையே வழக்கமாக சென்று வருவோர் மட்டுமே முன்பதிவு டிக்கெட் பெற்று பயணிக்கின்றனர்.

வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு விட்டதால், குடும்பத்துடன் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருப்பூர், கோவையை கடந்து கேரளா செல்லும் ரயில்களில் கூட்டம் மூன்றில் ஒரு பங்கு சரிந்துள்ளது. இதனால், ரயில்வே ஸ்டேஷன் இரண்டு பிளாட்பார்ம் நேற்று ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,'ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கினால், மீண்டும் திரும்ப முடியாது என்பதால், பலரும் டிக்கெட் முன்பதிவு தவிர்த்து விட்டனர். பயணிகள் எண்ணிக்கை குறைவால் இதுவரை சேலம் கோட்டத்தில், எட்டு ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X