மேற்கு வங்கத்தில் திரிணமுல் அராஜகம் :பா.ஜ., வினர் மீது தாக்குதல்

Updated : மே 08, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (22+ 45)
Share
Advertisement
கோல்கட்டா ;மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான, 24 மணி நேரத்திற்குள், திரிணமுல் காங்., தொண்டர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, 12க்கும் மேற்பட்டோர்பலியாகினர். மாநில சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, நிலைமையைகட்டுக்குள் கொண்டு வருவது குறித்து, கவர்னர் ஜக்தீப் தன்கருடன், நேற்று அவசர ஆலோசனை
மேற்கு வங்கம், திரிணமுல், அராஜகம், பா.ஜ., கொலைவெறி

கோல்கட்டா ;மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான, 24 மணி நேரத்திற்குள், திரிணமுல் காங்., தொண்டர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, 12க்கும் மேற்பட்டோர்பலியாகினர்.

மாநில சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, நிலைமையைகட்டுக்குள் கொண்டு வருவது குறித்து, கவர்னர் ஜக்தீப் தன்கருடன், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.மேற்கு வங்கத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ., 77 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, இன்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார்.இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான, 24 மணி நேரத்திற்குள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்தது.




தீக்கிரை



பா.ஜ., - திரிணமுல் காங்., தொண்டர்கள் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. இதில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், 12 பேர் உயிரிழந்ததாகவும், தொண்டர்களின் வீடுகள், கட்சி அலுவலகங்கள், திரிணமுல் காங்., தொண்டர்களால் சூறையாடப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, திரிணமுல் காங்., தொண்டர்கள் ஐந்து பேர், கலவரத்தில் உயிரிழந்ததாக, அக்கட்சி தெரிவித்தது. இந்த அரசியல் வன்முறை சம்பவங்கள் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, மம்தா பானர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கம், அமைதியை விரும்பும் மாநிலம். தேர்தல் சமயத்தில், பா.ஜ.,வினரும், மத்திய ஆயுத படையினரும் கடும் தொல்லைகள் கொடுத்தனர். பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு, பின் அடங்கியது.அனைவரும் அமைதி காக்க வேண்டும். தயவு செய்து வன்முறையில் ஈடுபடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.சட்டம் - ஒழுங்கு குறித்து, உயர் அதிகாரிகளுடன், முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று ஆலோசனை நடத்தினார்.

மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:வெற்றி பெற்ற பிறகும் திரிணமுல் காங்., ஏன் வன்முறையில் ஈடுபடுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், அலுவலகங்கள், கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை எனில், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று கோல்கட்டாவுக்கு வந்தார். வன்முறை சம்பவங்களை கண்டித்து, பா.ஜ.,வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மாநில பா.ஜ., தலைவர் திலீப் கோஷ் மற்றும் முதல்வர் மம்தா ஆகியோரை, மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர், நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதற்கிடையே, கவர்னர் ஜக்தீப் தன்கரை தொலைபேசி வாயிலாக அழைத்து, சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.


கவலை



கவர்னர் ஜக்தீப் தன்கர் தனது, 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ள வன்முறைகள் குறித்தும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.வன்முறை, காழ்ப்புணர்ச்சி, படுகொலைகள், தீ வைப்பு சம்பவங்கள், கொள்ளை மற்றும் கொலைகள் தடையின்றி தொடர்வது குறித்து, பிரதமருடன் பகிர்ந்து கொண்டேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, மம்தா போட்டியிட்டு தோல்வி அடைந்த நந்திகிராம் தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும், இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


கங்கனா கணக்கு முடக்கம்!



மேற்கு வங்கத்தில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், 34, தன் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், சில கருத்துகளை பதிவிட்டார். வெறுப்புக்குரிய கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டதாக கூறிய டுவிட்டர், அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது. இது குறித்து கங்கனா கூறும்போது, ''டுவிட்டர், ஒரு தரப்புக்கு சார்பாக செயல்படுகிறது. என் கருத்துகளை வெளிப்படுத்த, சினிமா உட்பட பல தளங்கள் உள்ளன,''என்றார்.


துாண்டும் மாநில அரசு!



பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:தேர்தல் வரலாற்றில் இந்த நாடு இதுவரை சந்தித்திடாத அளவில், வன்முறை சம்பவங்கள்மேற்கு வங்கத்தில் அரங்கேறி வருகின்றன. இது முழுக்க முழுக்க, மாநில அரசின் துாண்டுதலில் நடக்கிறது. இது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


சி.பி.ஐ., விசாரணை?

பா.ஜ., மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கவுரவ் பாட்டியா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தல் நேரத்திலும், அதன் பிறகும் பல்வேறு வன்முறை சம்பவங்கள், படுகொலைகள், கொள்ளை, கற்பழிப்புகளில், திரிணமுல் காங்., தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டு இருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (22+ 45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
06-மே-202108:56:49 IST Report Abuse
Jayvee இது பீஜெயபீயின் தற்கொலை நாடகம்
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
05-மே-202121:11:10 IST Report Abuse
தமிழ்வேள் மேற்கு வங்கக்கத்தில் கோர்க்கா லாந்து கேட்டபோதே பிரித்திருந்தால் , இன்று தீதியின் ஆட்டம் அடங்கியிருக்கும் ..இப்போது கூட நேரம் கடந்துபோய் விடவில்லை ...மேற்குவங்கம் தமிழகம் இரண்டும் தலா இரண்டு அல்லது மூன்று மாநிலங்களாக பிரிக்கப்படாவிட்டால் பிரிவினை வாதம் இஸ்லாமிய கிறிஸ்தவ மத வன்முறைகள் தலைவிரித்து ஆடும் ...மீண்டும் காஷ்மீர் தேவையில்லை ......மாநில பிரிவினை ஒன்றே தீவிரவாதிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் .....இந்திய ராணுவம் மேற்குவங்கம் மற்றும் தமிழகத்தில் அழைக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
05-மே-202116:09:50 IST Report Abuse
sahayadhas தண்ணி ஊத்த சொல்லுங்க மேடம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X