சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோடு பணியால் நெரிசல் அலைமோதும் மக்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு விரிவாக்கப்பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், ரோடு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் காந்தி சிலையில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ரோடு விரிவாக்கப் பணிகளுக்காக தாலுகா அலுவலக ரோடு, தபால் அலுவலகம் மற்றும் சப் - கலெக்டர் அலுவலக

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு விரிவாக்கப்பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், ரோடு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் காந்தி சிலையில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

ரோடு விரிவாக்கப் பணிகளுக்காக தாலுகா அலுவலக ரோடு, தபால் அலுவலகம் மற்றும் சப் - கலெக்டர் அலுவலக ரோடுகளில் ஜல்லிகற்கள் சமப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சி தபால் அலுவலக ரோடு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. வாகனங்கள், தாலுகா அலுவலக ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டன.இதனால், பஸ் ஸ்டாண்ட் மற்றும் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கூறுகையில், 'ரோடு பணிகளுக்காக வாகனங்கள் செல்ல தடை விதிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேர ஊரடங்கில் பணிகளை மேற்கொண்டால் நெரிசலை தவிர்க்கலாம். பணிகளையும் தொய்வின்றி மேற்கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X