சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

புதிய அரசுக்கு சவால்!

Added : மே 04, 2021
Share
Advertisement
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கு, 'கொரோனா, டெங்கு' போன்ற தொற்று நோய்களை தடுப்பது தான், முதன்மையான பணியாக இருக்கும். புதிய அரசு என்ன செய்ய வேண்டும் எனக் கூறும், பொது சுகாதார துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி: கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களை சமாளிக்க, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல், மருத்துவ கல்லுாரிகள் வரை, ஆய்வகங்களை மேம்படுத்த வேண்டும். மேலும்,
சொல்கிறார்கள்

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசுக்கு, 'கொரோனா, டெங்கு' போன்ற தொற்று நோய்களை தடுப்பது தான், முதன்மையான பணியாக இருக்கும். புதிய அரசு என்ன செய்ய வேண்டும் எனக் கூறும், பொது சுகாதார துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி: கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களை சமாளிக்க, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல், மருத்துவ கல்லுாரிகள் வரை, ஆய்வகங்களை மேம்படுத்த வேண்டும்.

மேலும், தொற்று நோய்களுக்கு என, தனியாக சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க வேண்டியது உடனடி தேவை.தாம்பரம், கோவை, மதுரை தோப்பூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தொற்று நோய் மருத்துவமனைகளை, போர்க்கால அடிப்படையில் மிக விரைவாக கட்டி முடிக்க வேண்டும்.திரவ ஆக்சிஜனை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக மாக வாங்கி இருப்பு வைத்திருந்தால், தேவைப்படும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை, நாமே எங்கு வேண்டுமானாலும் ஏற்படுத்த முடியும்.அது மட்டும் போதாது. ஒவ்வொரு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டும். மேலும், திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல, அரசு மருத்துவக் கல்லுாரிகள் சார்பில், 'கிரையோஜெனிக்' லாரிகள் வாங்க வேண்டியது அவசியம். அத்துடன், சென்னை, கிண்டி 'கிங் இன்ஸ்டிடியூட்'டை, மீண்டும் தடுப்பூசி தயாரிக்கும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் கிராமங்களில் பெரியம்மை, பிளேக், மலேரியா போன்ற நோய்களை கண்காணித்து வந்த, 'ஹெல்த் இன்ஸ்பெக்டர்'களில் பெரும்பாலானோர், அந்த நோய்கள் அழிந்து விட்டன எனக் கூறி, வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். குறைந்த எண்ணிக்கையில் தான் சிலர் அந்த பொறுப்பில் உள்ளனர். அவர்களையும் தேர்தல் போன்ற பிற பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். இப்போது ஏற்பட்டுள்ள தொற்றுநோய்களை கட்டுப்படுத்தாமல் போனதற்கு, ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பற்றாக்குறையே காரணம். எனவே, கிராமப்புற செவிலியர்களுக்கு இணையாக, ஹெல்த் இன்ஸ்பெக்டர்களை பணியமர்த்த வேண்டும்.

முக்கியமாக, தற்போதைய மருத்துவ காப்பீடு திட்டங்களிலும் மாற்றங்களை செய்ய வேண்டும். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு, குறைவான பிரீமியம் செலுத்தும் வகையில், அரசே, அனைவருக்கும் காப்பீட்டு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; அதில், ஏழைகளுக்கு இலவசமாகவே வழங்கலாம்.இன்னும், '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை இரட்டிப் பாக்க வேண்டும். இதுபோன்ற பல அம்சங்கள், புதிய அரசுக்கு சவாலாக அமையும் என, எதிர்பார்க்கிறேன்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X