நுாலகம் முன் கழிவுநீர் வாசகர்கள் புகார் வாசிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகம் முன் கழிவுநீர் வாசகர்கள் புகார் 'வாசிப்பு'

Added : மே 04, 2021
Share
அவிநாசி : திருமுருகன்பூண்டி நுாலகம் அருகே, வீடுகளில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீரால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில், கிளை நுாலகம் செயல்படுகிறது. நுாலகத்தின் அருகேயுள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வழிந்தோடி செல்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நுாலகத்துக்கு சென்று வருவோர் முகம்

அவிநாசி : திருமுருகன்பூண்டி நுாலகம் அருகே, வீடுகளில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீரால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில், கிளை நுாலகம் செயல்படுகிறது. நுாலகத்தின் அருகேயுள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வழிந்தோடி செல்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நுாலகத்துக்கு சென்று வருவோர் முகம் சுளிப்புடன் செல்ல வேண்டியுள்ளது.'அருகேயுள்ள வீடுகளில் வசிக்கும் சிலர், குப்பை கழிவுகளை நுாலகத்தின் பின் கொட்டி விடுகின்றனர்' என்ற புகார் வாசிக்கும் வாசகர்கள், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.

வாசகர்கள் சிலர் கூறுகையில், 'பழம்பெருமை வாய்ந்த திருமுருகநாத சுவாமி கோவில் முன் உள்ள வேலும், மயிலும் மண்டபத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், நுாலகத்திலும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீரை அப்புறப்படுத்தி, மீண்டும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.பேரூராட்சி செயல் இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ''புகார் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X