தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

Added : மே 04, 2021
Share
உடுமலை : மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த அளவு, கிராமங்களில் இல்லை. தொற்று உள்ள ஊராட்சிகளில், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தும் அதே சமயம், தொற்று இல்லா கிராமங்களிலும் துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக, செயலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப், சந்தை, கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில்,

உடுமலை : மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த அளவு, கிராமங்களில் இல்லை. தொற்று உள்ள ஊராட்சிகளில், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தும் அதே சமயம், தொற்று இல்லா கிராமங்களிலும் துாய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக, செயலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப், சந்தை, கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில், கிருமிநாசினி கொண்டு தெளிக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களின் வீடு உள்ள வீதிகள் பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்த வேண்டும்.வீடுகளில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், பல்ஸ் ஆக்சிமீட்டர் வாயிலாக, அவர்களது ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.ஊராட்சி செயலர்கள் கூறுகையில், 'தொற்று கட்டுக்குள் இருக்கிறது. தொற்று இல்லாத கிராமங்களில், கண்காணித்து வருகிறோம். கிராம மக்கள் நல்ல முறையில் ஒத்துழைக்கின்றனர்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X