பொது செய்தி

தமிழ்நாடு

73 பேருக்கு தொற்று; தடுப்பு பணிகள் தீவிரம்

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொளளாச்சி நகரம், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகள், கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாவில், மொத்தம், 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி, ரத்தினசபாபதிபுரம், வெங்கடேசா காலனி, நாச்சிமுத்து வீதி, ஜோதிநகர் காலனி, அழகப்பா லே - அவுட், மகாலிங்கபுரம், பி.கே.எஸ்., காலனி குறிஞ்சி நகர், பத்ரகாளியம்மன் கோவில் வீதி, பெரியார் காலனி,

பொள்ளாச்சி : பொளளாச்சி நகரம், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியப் பகுதிகள், கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாவில், மொத்தம், 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி, ரத்தினசபாபதிபுரம், வெங்கடேசா காலனி, நாச்சிமுத்து வீதி, ஜோதிநகர் காலனி, அழகப்பா லே - அவுட், மகாலிங்கபுரம், பி.கே.எஸ்., காலனி குறிஞ்சி நகர், பத்ரகாளியம்மன் கோவில் வீதி, பெரியார் காலனி, அன்சாரி வீதி, குமரன் நகர், நல்லிகவுண்டர் லே - அவுட், கிருஷ்ணசாமி லே - அவுட் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டியில் தலா, மூன்று பேருக்கும், சின்னாம்பாளையத்தில் இருவர், அம்மச்சிகவுண்டன்புதுார், எஸ். பொன்னாபுரம், எஸ். மலையாண்டிபட்டணம், ஜமீன் ஊத்துக்குளி, கஞ்சம்பட்டி, சீலக்காம்பட்டி, தொண்டாமுத்துார், நாட்டுக்கல்பாளையத்தில் தலா ஒருவர் என மொத்தம், 16 பேருக்கு தொற்று உறுதியானது.

வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆச்சிப்பட்டியில் நான்கு பேருக்கும், ஏரிப்பட்டி, நரசிங்கா புரத்தில், தலா ஒருவருக்கும், என, மொத்தம், ஏழு பேருக்கு தொற்று உறுதியானது. கிணத்துக் கடவுகிணத்துக்கடவு பகுதியில், சொலவம்பாளையம், கிருஷ்ணசாமிபுரம், ஆதித்யா அவென்யூ, காபுலிபாளையம், மற்றும் பனப்பட்டி பகுதியில், 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.ஆனைமலைஆனைமலை, கோட்டூர், திவான்சாபுதுார், வாழைக்கொம்புநாகூர், திவான்சாபுதுார் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று, 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதித்தவர்களுடன் வசித்தவர்களிடம் சுகாதாரத்துறையினர், பரிசோதனை மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

கிராமங்கள் தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். நேற்று, பல பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த, நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.வால்பாறைவால்பாறை நகரை சேர்ந்த, 65 வயது முதியவர் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த, 1ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமையில், குடியிருப்பு பகுதிகளில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறையில், மொத்தம், 73 பேருக்கு தொற்று உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X