பொது செய்தி

தமிழ்நாடு

பின்னலாடை விலை 15 சதவீதம் உயர்வு

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : பின்னலாடை விலை உயர்வு, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) அறிவித்துள்ளது. ஒசைரி நுால் விலை உயர்வு, நிட்டிங், டையிங் போன்ற ஜாப் ஒர்க் கட்டணங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் ஆடை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி செலவு

திருப்பூர் : பின்னலாடை விலை உயர்வு, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) அறிவித்துள்ளது.

ஒசைரி நுால் விலை உயர்வு, நிட்டிங், டையிங் போன்ற ஜாப் ஒர்க் கட்டணங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் ஆடை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி செலவு அதிகரிப்புக்கு ஏற்ப, ஆயத்த ஆடை விலையை 15 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளவேண்டும் என, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

தற்போது, இம்மாதம் 1ம் தேதி முதல் ஆடை விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.'சைமா' தலைவர் ஈஸ்வரன் அறிக்கை:பின்னலாடை உற்பத்தி மூலப்பொருளான நுால் விலை அபரிமிதமாக உயர்ந்துகொண்டே செல்கிறது. எலாஸ்டிக் டேப்ஸ், பாலிதீன் பை, லாரி வாடகை, பேக்கிங் பொருட்கள், நிட்டிங், டையிங், பிரின்டிங், காம்பாக்டிங் கட்டணங்கள் என, அனைத்து பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன.பின்னலாடைகளின் விலையும், 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது; இந்த விலை உயர்வு, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வர்த்தகர்களும், நுகர்வோரும், தவிர்க்கமுடியாத விலை உயர்வை, ஏற்றுக்கொள்ளவேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X