பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலகம் செல்பவரா... கட்டாயம் படிங்க!

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : ''அலுவலகங்கள் செல்லும் ஊழியர்கள், சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தம் செய்வதை முறையாக பின்பற்ற வேண்டும்,'' என, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவர் தனலட்சுமி தெரிவித்தார். கொரோனா தொற்று பாதித்து உடல் நலத்திலும், பொருளாதாரத்திலும் மாற்றம் மற்றும் மன ரீதியாகவும் சவால்களை சந்தித்து கொண்டுள்ளோம். இதை கட்டுப்படுத்த அரசு, சுகாதாரத் துறை

பொள்ளாச்சி : ''அலுவலகங்கள் செல்லும் ஊழியர்கள், சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தம் செய்வதை முறையாக பின்பற்ற வேண்டும்,'' என, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவர் தனலட்சுமி தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதித்து உடல் நலத்திலும், பொருளாதாரத்திலும் மாற்றம் மற்றும் மன ரீதியாகவும் சவால்களை சந்தித்து கொண்டுள்ளோம். இதை கட்டுப்படுத்த அரசு, சுகாதாரத் துறை இணைந்து பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், அலுவலகங்கள் செல்வோர், கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், என, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவர் தனலட்சுமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பரவலை தடுக்கணும்நாம் உபயோகிக்கும் முகக்கவசத்தை குறைந்தது, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வரை மட்டும் உபயோகிக்க வேண்டும். அதன் பின், புதிய முகக்கவசம் அணிவது நல்லது.

முகக்கவசத்தின் முன் பகுதிகளை தொடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறை முகக்கவசத்தை மாற்றிய பின், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிப்பதன் வாயிலாக பரவலை கட்டுப்படுத்த முடியும்.வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பியதும், கை, கால்களுக்கு இரண்டு நிமிடங்கள் சோப்பு போட்டு சுத்தமாக கழுவிய பின் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.பழகும் நபர்கள் அனைவரும், முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே தொற்று பரவலை தடுக்க முடியும். முகக்கவசம் அணியாமல் பேசும் நபர்களிடம் ஐந்து முதல், பத்து நிமிடத்துக்கு மேல் உரையாடல்களை தவிர்க்க வேண்டும்.இதை பின்பற்றுங்க!அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்கள், நண்பர்களுடன் சேர்ந்து உணவு மற்றும் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவதுடன், முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.அலுவலகத்தில் அல்லது வேலை நேரங்களில், குறைந்தது ஐந்து முதல் 10 முறையாவது சோப்பு கொண்டு, முழங்கை வரை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் பொருட்கள் முடிந்தளவு கழுவுதற்கு உகந்ததாக இருக்கும் பொருட்களை மட்டும் வெளியில் எடுத்துச் செல்லலாம். ஏனென்றால், வீட்டுக்கு கொண்டு செல்லும் போது, அவற்றை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.குறைந்த அளவிலான பொருட்களை பயன்படுத்துவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இது, நோய் பாதிப்பில் இருந்து பெருமளவு பாதுகாக்கும். தடுப்பூசி போடுவதால் பின்விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.சத்தான மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தொண்டைக்கு இதமான மிளகு, பூண்டு மற்றும் சுக்கு போன்ற உணவு பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தவறாமல் மூச்சு பயிற்சி மற்றும் ஆழ்ந்த துாக்கம் ஆகியவை நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X