பொது செய்தி

தமிழ்நாடு

தன்னம்பிக்கை ஒன்றே, திருப்பூருக்கு ஆயுதம்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''தொழிற்சாலைகளின் இயக்கம் ஒரு காலத்திலும் முடங்கிவிடக்கூடாது; தொழிலாளருக்கான தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்'' என்று திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். கடந்தாண்டு, ஊரடங்கு, பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனத்தினருக்கும் ஏராளமான படிப்பினைகளை உணர்த்தியது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்த நிலையில், இரவு ஊரடங்கு,

திருப்பூர் : ''தொழிற்சாலைகளின் இயக்கம் ஒரு காலத்திலும் முடங்கிவிடக்கூடாது; தொழிலாளருக்கான தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்'' என்று திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

கடந்தாண்டு, ஊரடங்கு, பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனத்தினருக்கும் ஏராளமான படிப்பினைகளை உணர்த்தியது. தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்த நிலையில், இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க, இது அவசியம் என்றாலும், திருப்பூரில், தொழில்துறை, தொழிலாளர், வணிக நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார சிக்கல், வாழ்வாதார பிரச்னைகளை, ஊரடங்கு ஏற்படுத்த துவங்கியிருக்கிறது.

தொழில்துறையினர் கூறியதாவது:'கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கடைசி வழி முறையாக இருக்கட்டும்' என்று பிரதமர் மோடி பேசியதை, தொழில்முனைவோர் பலர் வரவேற்றுள்ளனர்.திருப்பூரில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்வதால், மருத்துவத் துறையினர் திணறுகின்னறர்.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை முக்கிய வழிமுறையாக வல்லுனர்கள் பரிந்துரைத்தால், அதை, தவிர்க்க இயலாத நிலை ஏற்படலாம். ஆனால், ஊரடங்கு காரணமாக, மக்கள் வாழ்வாதாரம் முடங்கிவிடக்கூடாது.இதனால்தான், வார இறுதி நாட்கள், மாலையிலிருந்து அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த மாதம், கொரோனா பரவல் வேகம் எடுக்கும் என்று கணிக்கப்பட்டாலும், புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அரசு, பலர் ஒரே இடத்தில் பணியாற்றும் தொழிற்சாலைகள் - வணிக நிறுவனங்களை எப்படிக் கையாள்வது என்று முன்கூட்டித் திட்டமிட வேண்டும். முழுமையாக இயங்க அனுமதியளிப்பது என்பதை வழிகாட்டு நெறிமுறைகளுடன் பின்ற்ற தயாராக தொழில்துறையினர் உள்ளனர்.திடீரென இயக்கத்தை நிறுத்துவது என்று முடிவெடுத்தால் நிறுவனத்தினரும், தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவர். இத்தகைய முடிவு, முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.

திருப்பூரை பொறுத்தவரை தொழிற்சாலைகளின் இயக்கம் ஒரு காலத்திலும் முடங்கிவிடக் கூடாது; தொழிலாளருக்கான தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். இதன் மூலம், வர்த்தகர்களுக்கும் திருப்பூர் மீதான நேர்மறை உணர்வை அதிகரிக்கலாம்; இது ஆர்டர்களை அதிகரிக்க உதவும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நம்பிக்கை பெருகட்டும்!கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, திருப்பூரில் பணிபுரிந்துவந்த வெளிமாநில தொழிலாளர் மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர் ஏராளமானோர் திருப்பூரை விட்டு வெளியேறினர்.

ஊரடங்கால், வேலை மற்றும் வருவாய் இழப்பு காரணமாக, சொந்த ஊரில் இருப்பதையே தொழிலாளர் பெரும்பாலானோர் விரும்பினர். கடந்த முறை ஏற்பட்ட அனுபவம் காரணமாக, இந்த முறை, ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தாவிட்டாலும், இதுகுறித்த அச்சத்தில், தொழிலாளர் வெளியேற்றம் தொடர்கிறது. இவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X