பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி மையங்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை பகுதிகளில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதத்தில், 1500 பேர் வரை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, 10 பேர் பலியாகியுள்ளனர்.நாள் ஒன்றுக்கு சராசரியாக, 50 நோயாளிகள் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.உடுமலை அரசு மருத்துவமனையில், சிறப்பு பிரிவில், 65 பேர்

உடுமலை : கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உடுமலை பகுதிகளில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதத்தில், 1500 பேர் வரை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, 10 பேர் பலியாகியுள்ளனர்.நாள் ஒன்றுக்கு சராசரியாக, 50 நோயாளிகள் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.உடுமலை அரசு மருத்துவமனையில், சிறப்பு பிரிவில், 65 பேர் வரையும், அரசு கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில், 45 பேரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டை விட, கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு வழிகாட்டுதல் வழங்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சாார்பில், 16 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

.உடுமலை வட்டாரத்திற்கு, எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு, தொடர்புக்கு, 98423 86892 என்ற எண்ணில் மருத்துவ அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உதவி மையத்தை, 97902 23004 என்ற எண்ணும், மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, குமரலிங்கம் ஆரம்ப சுகாதார நிலையம் உதவி மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மைய மருத்துவ அலுவலரை, 96299 38013 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இம்மையங்களில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் நிலையை பரிசோதனை செய்து, அவர்களின் நோய் தன்மை அறிந்து, அரசு மருத்துவமனை அல்லது கோவிட் சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.நோயாளிகள் விரும்பினால், கோவிட் சிறப்பு சித்த மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், பாதிப்பு குறைவாக இருந்தால், உரிய மருந்துகள் வழங்கி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, அரசு மருத்துவமனையில், நோயின் தாக்கம் அதிகம் பாதித்தவர்கள் மட்டும் பரிந்துரைக்கப்படுவதோடு, குறைவான பாதிப்பு உள்ளவர்களை, சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறவும் அனுமதிக்கப்படுகிறது. எனவே, தொற்று பாதித்தவர்கள் உதவி மையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.முகக்கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் மற்றும் தனி மனித இடைவெளி பராமரித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், நோய் பாதிப்பிலிருந்து தப்ப முடியும். எனவே, விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X