பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கவனிப்பு மையம் துவக்கம்

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில்,தினமும், 20 - 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நோயாளிகள் வசதிக்காக அரசு மருத்துவமனையில், 160; நாச்சிமுத்து பிரசவ விடுதியில், 40 என, மொத்தம், 200 பெட் வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், பொள்ளாச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில்,தினமும், 20 - 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நோயாளிகள் வசதிக்காக அரசு மருத்துவமனையில், 160; நாச்சிமுத்து பிரசவ விடுதியில், 40 என, மொத்தம், 200 பெட் வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், பொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் கல்லுாரியில், முதற்கட்டமாக, 200 பெட் வசதியுடன் கவனிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் லேசான அறிகுறியுடன் உள்ள நபர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வருபவர்களுக்கு, எவ்விதமான பாதிப்பு உள்ளது என கண்டறிந்து, அதற்கேற்ப மருத்துவமனை அல்லது கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.

கொரோனா பாதித்தவர்கள் நேரடியாக கவனிப்பு மையத்துக்கு செல்லக்கூடாது. டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில் அனுமதிக்கப்படுவர்.எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு கவனிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.இங்கு, தேவையான மாத்திரைகள், உணவு வழங்கப்படும். டாக்டர் மற்றும் செவிலியர்கள் குழு, மூன்று 'ஷிப்ட்' கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மையத்தில், மொத்தம், 45 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X