சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டோரம் மண் மாயம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

Added : மே 04, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி அருகே ரோட்டோரம் மண் திருட்டு நடப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவிநாசியில் நெடுஞ்சாலைத்துறை ரோடு, பராமரிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில், 'ஆட்டையாம்பாளையம் பகுதியில், ரோட்டோரம் மற்றும் வீடுகளுக்கு முன் இருந்த மண், அள்ளி செல்லப்பட்டுள்ளது' என, அப்பகுதியினர் புகார் கூறினர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

அவிநாசி : அவிநாசி அருகே ரோட்டோரம் மண் திருட்டு நடப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அவிநாசியில் நெடுஞ்சாலைத்துறை ரோடு, பராமரிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில், 'ஆட்டையாம்பாளையம் பகுதியில், ரோட்டோரம் மற்றும் வீடுகளுக்கு முன் இருந்த மண், அள்ளி செல்லப்பட்டுள்ளது' என, அப்பகுதியினர் புகார் கூறினர்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பலரும் வீடுகளின் முகப்பு பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டி, மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றி வைத்துள்ளனர். இதனால், மழைக்காலங்களில் வழிந்தோடி வரும் மழைநீர், ரோட்டோரம் தேங்கி நிற்கிறது.

இது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், ரோடும் சேதமடைகிறது.எனவே, ரோட்டோரம் உள்ள மண் குவியலை அகற்றுவதன் மூலம், மழைநீர் ரோட்டில் தேங்கி நிற்காமல், வழிந்தோடி சென்று, கால்வாயில் சங்கமிக்கும். இதற்கு தடையாக, ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள மண் குவியலை தான் அகற்றி வருகிறோம். யாரும் திருடவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X