பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை களங்கள் 'பிஸி' விலை உயருமென ஆவல்

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு, கொப்பரை விலையின் அடிப்படையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.வழக்கமாக, கோடை காலத்தில், தேங்காய் வரத்து அதிகரித்து, கொப்பரை, தேங்காய் விலையில், மாற்றம் ஏற்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈ தாக்குதல் உட்பட நோய்த்தாக்குதலால், தேங்காய்

உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு, கொப்பரை விலையின் அடிப்படையில், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.வழக்கமாக, கோடை காலத்தில், தேங்காய் வரத்து அதிகரித்து, கொப்பரை, தேங்காய் விலையில், மாற்றம் ஏற்படுவது வழக்கம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈ தாக்குதல் உட்பட நோய்த்தாக்குதலால், தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்து, கோடையிலும், நிலையான விலை கிடைத்து வந்தது. நடப்பாண்டும், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு, முன்னர் கொப்பரை விலை கிலோவுக்கு, 135 ரூபாய் வரை இருந்தது.தேர்தல் கட்டுப்பாடுகளால், வர்த்தகம் பாதித்து, விலையில், சற்று மாறுதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக, கொப்பரை விலை கிலோ, 112 ரூபாயாக உள்ளது.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த, கொப்பரை உற்பத்தி மீண்டும், உலர்களங்களில், தீவிரமடைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் முன்னர், உற்பத்தியை அதிகரித்து இருப்பு வைக்கவும், கொப்பரை விலை விரைவில், அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், இப்பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X