சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடியும் நிலையில் நிழற்கூரை

Added : மே 04, 2021
Share
Advertisement
வால்பாறை, : வால்பாறை காந்திசிலை வளாகம், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் காந்திசிலையில் இருந்து தான் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரும் வகையில் நிழற்கூரை கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன்பின், பயணிகள் நிழற்கூரையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் நகராட்சி சார்பில்

வால்பாறை, : வால்பாறை காந்திசிலை வளாகம், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் காந்திசிலையில் இருந்து தான் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரும் வகையில் நிழற்கூரை கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன்பின், பயணிகள் நிழற்கூரையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் நகராட்சி சார்பில் எடுக்கவில்லை.இந்நிலையில், பயணிகள் நிழற்கூரையின் மேல் பகுதி இடிந்து விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் நிற்கின்றனர்.மக்கள் கூறுகையில், 'நகராட்சி சார்பில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்வதில்லை. காந்திசிலை வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூரையை சீரமைத்து, கூடுதலாக ஒரு நிழற்கூரை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X