பொது செய்தி

தமிழ்நாடு

நார் தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : மாவட்ட தொழில் மையம் பரிந்துரையால், தென்னை நார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநில மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு, தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 650க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் மட்டும், 400க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.இந்த தொழிலில், உள்ளூர் மற்றும்

பொள்ளாச்சி : மாவட்ட தொழில் மையம் பரிந்துரையால், தென்னை நார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநில மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு, தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில், 650க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. பொள்ளாச்சி, நெகமம் பகுதியில் மட்டும், 400க்கும் மேற்பட்ட நார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.இந்த தொழிலில், உள்ளூர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த, பல ஆயிரம் ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், மீதமுள்ள தொழிலாளர்கள் மட்டுமே குடும்பத்துடன் பணியாற்றுகின்றனர். தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன.

இந்நிலையில், தென்னை நார் தொழிற்சாலையில் பணியாற்றும் உள்ளூர், வெளிமாநில தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.மாவட்ட தொழில் மையம் பரிந்துரையின் பேரில், தென்னை நார் உற்பத்தி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தொழிற்சாலையில், 50 தொழிலாளர்கள் தயாராக இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர், நேரடியாக சென்று, தடுப்பூசி போட்டு வருகின்றனர்.நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'தற்போது பணியில் இருக்கும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு, தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் இருந்து திரும்பும் வடமாநில தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X