பொது செய்தி

தமிழ்நாடு

முதியோருக்கும் டிவி பாடம் கல்வித்துறையினர் அறிமுகம்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் படிப்பவர்களுக்கும், கல்வி டிவியில் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகிறது. தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் வாயிலாக, எழுத்தறிவு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி வளாகங்களில் எழுத்தறிவு

திருப்பூர் : 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் படிப்பவர்களுக்கும், கல்வி டிவியில் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகிறது.

தமிழகத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களுக்கு, 'கற்போம் எழுதுவோம்' இயக்கம் வாயிலாக, எழுத்தறிவு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி வளாகங்களில் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன், கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருப்பூரில், 11 ஆயிரம் பேர் இதன்கீழ் அடிப்படை கல்வியறிவை பெற்றுவருகின்றனர்.

இவர்களுக்கு தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பயிற்சி திட்டத்தில் உள்ள பாடக்கருத்துகள், வீடியோ வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், ''தமிழக அரசின் கல்வி டிவியில் தினமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. வேலைக்கு செல்வோர், முதியோர் என அனைத்து தர மக்களும் உள்ளதால், தினமும், இரவு, 7:00 முதல், அரை மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் உள்ளவர்கள் பார்த்து பயன்பெறலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X