பொது செய்தி

தமிழ்நாடு

மாசடைந்த கிருஷ்ணா குளம் துார்வாரப்படுமா?

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் வறண்டு, பாலித்தீன் கழிவுகள் தேங்குமிடமாக காட்சியளிக்கிறது. இதனை துார்வாரி பாதுகாக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மழை காலங்களில் வெளியேறும் தண்ணீர், ஜமீன்ஊத்துக்குளி - நல்லுார் ரோட்டில், கிருஷ்ணா குளத்தில் தேங்கும் வகையில், 60 ஆண்டுகளுக்கு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் வறண்டு, பாலித்தீன் கழிவுகள் தேங்குமிடமாக காட்சியளிக்கிறது. இதனை துார்வாரி பாதுகாக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மழை காலங்களில் வெளியேறும் தண்ணீர், ஜமீன்ஊத்துக்குளி - நல்லுார் ரோட்டில், கிருஷ்ணா குளத்தில் தேங்கும் வகையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர், ஜமீன் முத்துார், ஜலத்துார், செல்லாண்டிகவுண்டன் புதுார், ராமபட்டணம் வழியாக பாய்ந்து, கேரளாவுக்கு செல்கிறது.கிருஷ்ணா குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், வீணாகி கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், ராமபட்டணம் பகுதியில், சின்ன அணை, பெரியணை என இரண்டு தடுப்பணைகள் வாயிலாக, ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

மேலும், நீர்வழித்தடத்திலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்து விவசாயம் செழிக்க கைகொடுக்கிறது. மழை பெய்யாத காலத்தில், பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், குளத்தில் தேங்குகிறது. இந்த கழிவுநீரையும் விவசாயிகள் பயன்படுத்தி, சாகுபடி செய்கின்றனர்.கிருஷ்ணா குளம், கழிவுநீரால் மாசடைந்த சூழலில், பாலித்தீன் டம்ளர், உணவு கழிவுகளுடன் பாலித்தீன் கவர்களையும் அப்படியே குளத்தில் வீசிச் செல்கின்றனர். தற்போது, குளம் வறண்ட சூழலில், தண்ணீர் இருந்த இடம் முழுவதும் மண்ணை மலடாக்கும் பாலித்தீன் கழிவுகள் தேங்கியுள்ளன.குளம் முழுவதும் தேங்கி கிடக்கும் பாலித்தீன் கழிவால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழல் உள்ளது. குளத்தை பாதுகாக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது.இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'கிருஷ்ணாகுளம் பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறவும் உதவியாக உள்ளது. ஆனால், தற்போது குளம் மாசடைந்து உள்ளது. குளம் வறண்ட சூழலில், பாலித்தீன் கழிவுகளை அகற்றி, துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X