பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய நாட்டு ரக காய்கறிகள் விதை கிடைப்பது அரிது!

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : காய்கறிகளில் இருந்து விதை உற்பத்தி செய்வதற்கு, எது சரியான தருணம் என்பது குறித்து, அனுபவ விவசாயிகள் விளக்கம் அறிவுறுத்தியுள்ளனர். உற்பத்தி பெருக்கத்தை மட்டும் குறி வைத்து, வீரிய ஒட்டுரக காய்கறி விதைகளை ஆய்வுக் கூடங்களில் உருவாக்கி, விவசாயிகளை அதை நோக்கி திசை திருப்பியதன் விளைவு, பாரம்பரிய ரக காய்கறிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வீரிய ஒட்டுரக காய்கறி

பொள்ளாச்சி : காய்கறிகளில் இருந்து விதை உற்பத்தி செய்வதற்கு, எது சரியான தருணம் என்பது குறித்து, அனுபவ விவசாயிகள் விளக்கம் அறிவுறுத்தியுள்ளனர்.

உற்பத்தி பெருக்கத்தை மட்டும் குறி வைத்து, வீரிய ஒட்டுரக காய்கறி விதைகளை ஆய்வுக் கூடங்களில் உருவாக்கி, விவசாயிகளை அதை நோக்கி திசை திருப்பியதன் விளைவு, பாரம்பரிய ரக காய்கறிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வீரிய ஒட்டுரக காய்கறி பயிரிட்டால், மறுமுறை சாகுபடி செய்ய, விவசாயிகளே விதைகளை உற்பத்தி செய்து கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் விலை கொடுத்து, கடைகளில் தான் விதை வாங்க வேண்டியுள்ளது.ஆனால், நாட்டு ரகத்தில், எத்தனை முறை வேண்டுமானாலும் விவசாயிகளே விதை உற்பத்தி செய்து கொள்ள முடியும். உரம், இடுபொருள் செலவுகளும் குறையும்.

இன்றைய சூழலில், மிக அரிதாக சில விவசாயிகள் நாட்டு ரக காய்கறிகளை பயிரிடுகின்றனர். நாட்டு ரகம் பயிரிட விவசாயிகள் விரும்பினாலும், விதைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. அப்படி விதைகள் கிடைத்து பயிரிட்டால், விதை உற்பத்தி செய்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.எந்த பயிரில், எந்த பருவத்தில் விதைகளை எடுக்க வேண்டும் என அனுபவ விவசாயி கரட்டுப்பாளையம் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மிளகாய்கள் பச்சை நிறத்தில் இருந்து, சிவப்பு நிறமாக மாறி பழுத்திருக்க வேண்டும்.

இந்த தருணத்தில் அறுவடை செய்து விதை எடுக்கலாம்.கத்திரிக்காய் பச்சை, ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் இருந்து, மஞ்சள் நிறமாக மாறி இருக்க வேண்டும். அவ்வாறு மாறும்போது அறுவடை செய்தால், சிறந்த முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெற முடியும். தக்காளியில், பழங்கள் பச்சை நிறத்தில் இருந்து அடர் சிவப்பு நிறமாகவும், பழங்கள் நன்கு கனிந்து மென்மையாகவும் இருக்கும் தருணத்தில் அறுவடை செய்து விதை பெறலாம். வெண்டைக்காய்கள் பச்சை நிறத்தில் இருந்து, வெளிர் பழுப்பு நிறமாக மாறி இருக்க வேண்டும். மேலும், காய்களின் நுனியில் வெடிப்பு ஏற்படும் தருணத்ததில் அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X