பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதிப்பு மூடி மறைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
அவிநாசி : திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவிநாசியிலும், சமீபநாட்களாக, தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று அவிநாசி வி.ஏ.ஓ., உதவியாளர் சுந்தரமூர்த்தி, 34, உடல்நலக் குறைவால் இறந்தார். 'இவர் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் தான் இறந்தார்,' என, தகவல் பரவியது. அதேபோல், வேலாயுதம்பாளையம், பெரியாயிபாளையம் பகுதியிலும் சிலர்

அவிநாசி : திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவிநாசியிலும், சமீபநாட்களாக, தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது.

நேற்று அவிநாசி வி.ஏ.ஓ., உதவியாளர் சுந்தரமூர்த்தி, 34, உடல்நலக் குறைவால் இறந்தார். 'இவர் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் தான் இறந்தார்,' என, தகவல் பரவியது. அதேபோல், வேலாயுதம்பாளையம், பெரியாயிபாளையம் பகுதியிலும் சிலர் இறந்துள்ளனர் என கூறப்படுகிறது. ஆனால், இதை சுகாதார துறையினர் உறுதி படுத்தவில்லை.இதேபோன்று, தொற்று பாதிப்புக்கு உள்ளாவோர் மற்றும் இறப்போர் குறித்த விவரங்களும் மூடி மறைக்கப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் தொடர்பில் இருப்பவர்களை அடையாளம் காண்பதிலும், அவர்களை தொற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதிலும் கூட, சில இடங்களில் தொய்வு தென்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது:தொற்று பரவலை மூடி மறைப்பதால், யாருக்கும் எந்த பலனும் இல்லை. அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்பினர், கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற தொற்று தடுப்புப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், தினமும் ஏற்படும் தொற்று பாதிப்புகள், பாதிக்கப்படுவோர் மற்றும் இறப்போரின் விவரங்களை சுகாதாரத்துறையினர் தெரியப்படுத்தினால், அப்பகுதியில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க முடியும். இதன் மூலம், தொற்று பரவல் வெகுவாக கட்டுக்குள் வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாறணும் மனநிலை மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாவோர் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதனால், தங்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அதே நேரம், அவர்களது அருகில் வசிப்போர், அவர்களிடம் பேசக்கூட தயங்குகின்றனர்.இத்தகைய மனநிலை மாறவேண்டும். கொரோனா என்பது உலகளாவிய அச்சுறுத்தலாக மாறிவிட்ட நிலையில், தொற்று பாதிப்பு ஏற்படாமலிருக்க மருத்துவத்துறையினரின் வழிகாட்டல் களையும், தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் மனம் கோணாதபடி நடந்து கொண்டாலே, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X