பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் சம்பள உயர்வு என்னாச்சு

Added : மே 04, 2021
Share
Advertisement
வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி ஆகிய இடங்களில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான்டீ) உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது, தினக் கூலியாக ரூ. 338.91 வழங்கப் படுகிறது.இதே போல், தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 346.47 வழங்கப்படுகிறது. இந்நிலையில் 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி ஆகிய இடங்களில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான்டீ) உள்ளது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது, தினக் கூலியாக ரூ. 338.91 வழங்கப் படுகிறது.இதே போல், தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 346.47 வழங்கப்படுகிறது. இந்நிலையில் 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தற்போது வழங்கப்படும் சம்பளத்துடன், ரூ.12.50ம், தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5யும் சேர்த்து வழங்கப்படும், என, அ.தி.மு.க., அரசு அறிவித்தது. ஆனால், இன்று வரை தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் வழங்கவில்லை.தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:வால்பாறையில், வன விலங்குகளுக்கு இடையே, வெயிலிலும், கொட்டும் மழையிலும், உயிரை பணயம் வைத்து, தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசு அறிவித்த படி சம்பளம் பெற்றுத்தர தொழிற்சங்க தலைவர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு இணையான சம்பளம் தமிழகத்தில் பணிபுரியும் தேயிலை தொழிலாளர்களுக்கும் வழங்க, தொழிற்சங்கங்கள் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X