சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செலுத்தி கொண்டவரை மட்டுமல்ல... குடும்பத்தையே காப்பாற்றும் தடுப்பூசி!

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால், அதனை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதமான தடுப்பூசியை, அனைவரும் செலுத்தி கொள்ளுமாறு, தொழில் துறையினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆடிட்டர் ராமநாதன்:மூளை காய்ச்சல், பன்றி காய்ச்சல் உள்பட மற்ற தடுப்பூசிகள், போட்டுக் கொள்பவரை மட்டும் நோயிலிருந்து காப்பாற்றுகின்றன. கொரோனா தடுப்பூசி, போட்டுக் கொள்பவரை

திருப்பூர் : கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால், அதனை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதமான தடுப்பூசியை, அனைவரும் செலுத்தி கொள்ளுமாறு, தொழில் துறையினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆடிட்டர் ராமநாதன்:மூளை காய்ச்சல், பன்றி காய்ச்சல் உள்பட மற்ற தடுப்பூசிகள், போட்டுக் கொள்பவரை மட்டும் நோயிலிருந்து காப்பாற்றுகின்றன. கொரோனா தடுப்பூசி, போட்டுக் கொள்பவரை மட்டுமின்றி, குடும்பத்தினர் உட்பட நம் சுற்றத்தாரையும் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.கொரோனா, பாதிக்கப்பட்டவரை மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரையும் பாதிக்கச் செய்கிறது.எனவே, ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது, சமூக சேவைக்கு ஒப்பானது. ஊசி போட்டுக்கொள்ளுங்கள்; இவ்வுலகை காப்பாற்றுங்கள்.

அதிக மக்கள் தொகையுள்ள நம் நாட்டில், நேர்த்தியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்து வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் அரசின் முயற்சி, பாராட்டுக்குரியது.திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர் சங்க தலைவர் கோவிந்தசாமி:கொரோனாவை ஒழிக்க, தடுப்பூசியை தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லை. எனவே, அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வது காலத்தின் கட்டாயம். தடுப்பூசி குறித்த வீண் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளேன்; எவ்வித சிரமமும் இல்லை.தடுப்பூசி குறித்து, தொழிலாளர் மத்தியில், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.

சுகாதாரத்துறையுடன் இணைந்து, எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜன்:கொரோனா வேகமாக பரவிவருகிறது. தொற்று தடுப்புக்காக, அற்புதமான தடுப்பூசிகளை தயாரித்து, செலவில்லாமல் வழங்கிவருகிறது அரசு; இது, நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.தடுப்பூசி குறித்த புரளிகளை புறந்தள்ளவேண்டும். நாட்டின் தலையாய பதவியில் உள்ள பிரதமர் மோடி; தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி; புதிய முதல்வராக உள்ள ஸ்டாலின் என எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

நானும், எனது மனைவியும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளோம்; எந்த பாதிப்பும் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, விரைவில் கொரோனா இல்லாத தேசத்தை உருவாக்கவேண்டும்.கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன் தலைவர் கல்யாணசுந்தரம்:கோவேக்ஸின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு பக்கபலமாக உள்ளன. நான் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டேன்.நமது வீட்டையும், தாய்நாட்டையும் பாதுகாக்க, தனிமனிதர் ஒவ்வொரு வரும், தயங்காமல், தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். திருப்பூரில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் பல லட்சம் பேர் உள்ளனர். அனைத்து தொழிலாளருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X