பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையை காக்கும் நுண்ணுாட்டம்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை சுற்றுபகுதி விவசாயிகள், தென்னையில் சத்து குறைபாடுகளை நீக்க, நுண்ணுாட்டத்தை பயன்படுத்த, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்து உள்ளனர். ஆனைமலை ஒன்றிய பகுதியில் மொத்தம், 58 ஆயிரம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தென்னையில் ஆண்டுதோறும் சீசனுக்கு ஏற்ப, நோய்கள் ஏற்படும். அதேபோல், மணி, சாம்பல், நைட்ரஜன் ஆகிய சத்துக்கள் குறைபாட்டால், பல்வேறு நோய்

ஆனைமலை : ஆனைமலை சுற்றுபகுதி விவசாயிகள், தென்னையில் சத்து குறைபாடுகளை நீக்க, நுண்ணுாட்டத்தை பயன்படுத்த, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.

ஆனைமலை ஒன்றிய பகுதியில் மொத்தம், 58 ஆயிரம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தென்னையில் ஆண்டுதோறும் சீசனுக்கு ஏற்ப, நோய்கள் ஏற்படும். அதேபோல், மணி, சாம்பல், நைட்ரஜன் ஆகிய சத்துக்கள் குறைபாட்டால், பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நுண்ணுாட்டம் பயன்படுத்தி, சத்து குறைபாட்டை போக்க வேளாண்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:நுண்ணுாட்ட கலவைத்திட்டத்தில் வேளாண் துறையில், நுண்ணுாட்ட கலவை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், போரான், தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் கலந்துள்ளன. ஒரு கிலோவின் விலை, 82 ரூபாய். ஆனைமலை ஒன்றிய பகுதிக்கு வழங்குவதற்காக தற்போது, 1.75 டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த கலவையால் தென்னை மரங்களுக்கு போதிய அளவு நைட்ரஜன், சாம்பல் மற்றும் மணிச்சத்துக்கள் கிடைக்கும்.இதனால், தென்னையில் குறும்பை, பூ உதிரும் குறைபாடு வராது; பாளைகள் நன்கு விரிந்து வளர்ந்து மகசூல் அதிகரிக்கும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஒரு தென்னை மரத்துக்கு, அரை கிலோ நுண்ணுாட்ட சத்து பயன்படுத்த வேண்டும். மரத்தை சுற்றிலும் வட்டப்பாத்தி அமைத்து, ஒரு அடி ஆழத்துக்கு குழி தோண்ட வேண்டும்.குழியில், நுண்ணுாட்ட கலவையை பரப்பி, மண்ணை கிளறி, நீர் பாய்ச்ச வேண்டும். நுண்ணுாட்ட கலவையை தொழு உரத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம்.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள், வேளாண் அலுவலகத்தில் நுண்ணுாட்டத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தி, தென்னை மரங்களை காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X