பொது செய்தி

தமிழ்நாடு

நாளை கனமழை பெய்யும்! விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நாளை முதல் கனமழை பெய்யுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கை வருமாறு:கோவை மாவட்டத்தில், வரும், 10ம் தேதி வரையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் அதிகபட்சமாக, 34 மி.மீ.,க்கும் அதிகமாக

ஆனைமலை : பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், நாளை முதல் கனமழை பெய்யுமென, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கை வருமாறு:கோவை மாவட்டத்தில், வரும், 10ம் தேதி வரையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் அதிகபட்சமாக, 34 மி.மீ.,க்கும் அதிகமாக மழை பதிவாகும்.நாளை, 6ம் தேதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 34.1 மி.மீ., வரையிலும், வடக்கு ஒன்றியத்தில், 21.5 மி.மீ., மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 9.2 மி.மீ., வரையில் மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆனைமலை ஒன்றியத்தில், நாளை, 9.5 மி.மீ., மற்றும் வரும், 9ம் தேதி 22.6 மி.மீ., வரையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நான்கு ஒன்றியங்களிலும், 20 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். விவசாயிகள் தற்போதே கோடை உழவு மேற்கொண்டு, மழையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழை, கரும்புக்கு முட்டுக்கொடுத்து காற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X