பொது செய்தி

தமிழ்நாடு

பாதியில் நிற்குது! ஏழு மாதங்களாக தடுப்பணை பணி ....துரிதமாக கட்டி முடிக்க எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : கிணற்றுப்பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் கடந்த ஏழு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காளியப்பனுார் பள்ளம் தடுப்பணைப் பணிகளை மீண்டும் தொடங்கி, துரிதமாக நிறைவேற்ற வேண்டும்,என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், தேக்கம்பட்டி ஊராட்சி பெரியதாகும். இங்கு, 28க்கும் மேற்பட்ட

மேட்டுப்பாளையம் : கிணற்றுப்பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் கடந்த ஏழு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காளியப்பனுார் பள்ளம் தடுப்பணைப் பணிகளை மீண்டும் தொடங்கி, துரிதமாக நிறைவேற்ற வேண்டும்,என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், தேக்கம்பட்டி ஊராட்சி பெரியதாகும். இங்கு, 28க்கும் மேற்பட்ட கிராமங்களும், 86 லே- அவுட்டுகளும் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இங்கு கால்வாய் பாசனமோ, ஆற்றுப் பாசனமோ இல்லை. கிணற்றுத் தண்ணீரை மட்டுமே நம்பி, விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் தொண்டாமுத்துார் கூட்டு குடிநீர் திட்ட கழிவு நீர், ஊராட்சியில் உள்ள பள்ளம், தேக்கம்பட்டி கிராமம் வழியாக பவானி ஆற்றுக்கு செல்கிறது.

இந்த தண்ணீரை பல்வேறு இடங்களில், தடுத்து நிறுத்தி தேக்கி வைத்தால். கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைக்கும். எனவே, காளியப்பனுாரில் தடுப்பணை கட்டும்படி, தேக்கம்பட்டி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து, தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. ஆனால், கடந்த சில மாதங்களாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, காளியப்பனுார் பொதுமக்கள் கூறுகையில்,'தேக்கம்பட்டி ஊராட்சி காளியப்பனுார் பள்ளத்தில், ஓடும் தண்ணீரை தேக்கி நிறுத்த, தடுப்பணை கட்டும் பணிகள், கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கின.

அதன்பின் பல்வேறு காரணங்களால், கடந்த ஏழு மாதங்களாக பணிகள் செய்யாமல் நின்று உள்ளது. உடனடியாக தடுப்பணையை கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.இதுகுறித்து தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் நித்தியா நந்தகுமார் கூறியதாவது: தேக்கம்பட்டி ஊராட்சி அரசப்பனுார் பள்ளத்தில் தண்ணீரைத் தேக்க, காளியப்பனூரில் தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக, 8.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் துவங்கின.அப்போது தொடர்ந்து மழை பெய்ததால், இப்பள்ளத்தில் அதிகமான தண்ணீர் ஓடியது.

மேலும் தொண்டாமுத்துார் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, வெளியேற்றப்படும் கழிவு நீரும் இப்பள்ளத்தில் வந்தது. அதிகமான தண்ணீர் வந்ததால், பணியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.தற்போது வெயில் காலம் என்பதால், பள்ளத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. விரைவில் இங்கு தடுப்பணை கட்டும் பணிகள் துவங்கும்.மேலும், இந்த ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளையத்தில் மூன்று இடங்களிலும், குரும்பனுாரில் ஒரு தடுப்பணை என, மொத்தம் நான்கு இடங்களில், தலா 9.7 லட்சம் ரூபாய் செலவில், தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X