அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிகள் 2 வது நாளாக ஸ்டாலின் ஆலோசனை

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு பணிகள் குறித்து, இரண்டாவது நாளாக, அரசு உயர் அதிகாரிகளுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்,ஆலோசனை நடத்தினார்.கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, நேற்று முன்தினம், அரசு உயர் அதிகாரிகளுடன், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பங்கேற்பு அப்போது, 'மருத்துவ
 கொரோனா தடுப்பு பணிகள் 2 வது நாளாக ஸ்டாலின் ஆலோசனை

சென்னை:கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு பணிகள் குறித்து, இரண்டாவது நாளாக, அரசு உயர் அதிகாரிகளுடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்,ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக, நேற்று முன்தினம், அரசு உயர் அதிகாரிகளுடன், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


பங்கேற்பு



அப்போது, 'மருத்துவ சிகிச்சையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொய்வின்றி, முழு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தினார்.இதையடுத்து, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதை நடைமுறைப்படுத்துவதற்காக, ஆழ்வார்பேட்டை வீட்டில், இரண்டாவது நாளாக, ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை உயர் அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, பணீந்தர் ரெட்டி, டி.ஜி.பி., திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.


கண்காணிப்பு

இந்த ஆலோசனை கூட்டம், 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது அதிகாரிகளிடம், ஸ்டாலின் கூறியதாவது:

* புதிய கட்டுப்பாடுகளை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் வாயிலாக, நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். அனைத்து துறைகளும் சிறப்பாக, கண்காணித்து செயல்படுத்த வேண்டும்

* நோய் தொற்று பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்து, எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

* அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முறையாக, அனைத்து மாவட்டங்களிலும், கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

* வரும் சில நாட்களில், சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அவற்றை எதிர்கொள்ளத் தேவையான எண்ணிக்கையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு மற்றும் டாக்டர்கள் இருப்பதை கண்காணிக்க வேண்டும். தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய, கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, மாவட்டங்களுக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X