சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பங்களாவை முற்றுகையிட்ட காட்டு யானைகள்

Added : மே 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனுார் மலை அடிவாரத்தில் உள்ள பங்களாவை, 13 காட்டு யானைகள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தினசரி இரவு நேரங்களில், மலையோர கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் முற்றுகையிடும்

பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனுார் மலை அடிவாரத்தில் உள்ள பங்களாவை, 13 காட்டு யானைகள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தினசரி இரவு நேரங்களில், மலையோர கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் முற்றுகையிடும் போக்கு, அதிகரித்து வருகிறது.காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த, அகழி வெட்டுதல், சூரிய மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களை வனத்துறையினர், செயல்படுத்தினாலும், காட்டு யானைகளின் வரவை, முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.

பெ.நா.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி கிழக்கு, மேற்கு, தோலம்பாளையம் கல்பற்றாயன் கோவில் உள்ளிட்ட, 7 இடங்களில் வன விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொட்டி சரியான பராமரிப்பு இல்லாமல், இடிந்து கிடக்கிறது. இதனால், தண்ணீர் தேடி வரும், வன விலங்குகள், கிராமங்களுக்குள் போகும் அவல நிலை நீடித்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை, பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனுார் மலையடிவாரத்திலுள்ள பங்களாவை ஒட்டிய தோப்புக்குள், 13 காட்டு யானைகள் புகுந்தன.

தண்ணீர் தேடி அங்கும், இங்கும் அலைந்த யானைகள், பின்னர் அங்கு தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து, தாகத்தைத் தணித்துக் கொண்டன. சுமார், 2 மணி நேரம், அப்பகுதியில் சுற்றி திரிந்த யானைகளை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர், ஊருக்குள் புகாமல் தடுத்து, மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.இதேபோல கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாகம் அருகே காட்டு யானை களின் நடமாட்டம் இருந்தது. அவற்றையும், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர், காட்டுக்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,' மலையோர எல்லைகளில், வன விலங்குகள் தாகம் தீர்க்க, தண்ணீர் தொட்டிகள் வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளன. அவை, போதுமான பராமரிப்பின்றி, இடிந்து கிடக்கின்றன.அவற்றை சீரமைத்து அதில், குறிப்பிட்ட கால இடைவெளியில், தண்ணீரை நிரப்பி வைக்க, வனத்துறையினர் முன்வரவேண்டும். அங்கு தண்ணீர் இல்லாததால், யானைகள் மலையோர கிராமங்களுக்குள் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X