சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் குளிக்க தடை

Added : மே 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : நெல்லித்துறை அருகே, பவானி ஆற்றில் குளிக்க தடை விதித்து, அதற்காக பயன்படுத்தும் பாதையில், வனத்துறை சார்பில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், நெல்லித்துறை அருகே, குண்டுக்கல்துறை, கஞ்சி பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில், பவானி ஆற்றில் வெளியூர் மக்கள், இளைஞர்கள் அதிக அளவில் குளித்து வருகின்றனர்.குண்டுக்கல் துறை என்னுமிடத்தில் கடந்த

மேட்டுப்பாளையம் : நெல்லித்துறை அருகே, பவானி ஆற்றில் குளிக்க தடை விதித்து, அதற்காக பயன்படுத்தும் பாதையில், வனத்துறை சார்பில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், நெல்லித்துறை அருகே, குண்டுக்கல்துறை, கஞ்சி பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில், பவானி ஆற்றில் வெளியூர் மக்கள், இளைஞர்கள் அதிக அளவில் குளித்து வருகின்றனர்.குண்டுக்கல் துறை என்னுமிடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 25 க்கும் மேற்பட்டவர்கள், பவானி ஆற்று நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் குளிக்க போலீசார் தடை விதித்து, பிளக்ஸ் பேனர் மற்றும் தடுப்புகளை வைத்துள்ளனர். ஆனால், தடையை மீறி, விளாமரத்தூர் அருகே உள்ள, கஞ்சி பிள்ளையார் கோவில் வழியாக, பவானி ஆற்றுக்கு சென்று, சிலர் குளித்து வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையை சேர்ந்த இருவர், குண்டுக்கல்துறையில் உள்ள தடுப்பை தாண்டிச் சென்று, பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.இந்நிலையில் இப்பகுதியில் யாரும் குளிக்க செல்லாதவாறு பொதுமக்களும், போலீசாரும் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், கஞ்சி பிள்ளையார் கோவில் வழியாக, பவானி ஆற்றுக்கு யாரும் செல்லாத வகையில், மேட்டுப்பாளையம் வனத்துறையினர், தடுப்பு அமைத்து உள்ளனர்.

இங்கு பணியில் உள்ள வன ஊழியர்கள், வெளியூர் நபர்களிடம் ஆற்றில் குளிக்க அனுமதி இல்லை என, திருப்பி அனுப்பி வருகின்றனர்.உள்ளூர் ஆட்கள் மற்றும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்பவர்களை மட்டும் இவ்வழியாக வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். இதேபோன்று நெல்லித்துறை ஊராட்சி நிர்வாகமும், மக்களும் இணைந்து, பவானி ஆற்றில் வெளியூர் நபர்களை, குளிப்பதை தடுத்தால், உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X