தமிழ் மண் பதிப்பகத்தின் உரிமையாளர் மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழ் மண் பதிப்பகத்தின் உரிமையாளர் மரணம்

Added : மே 04, 2021
Share
சென்னை:பழந்தமிழ் நுால்களை தேடித்தேடி பதிப்பித்த, 'தமிழ் மண்' பதிப்பக உரிமையாளர், கோ.இளவழகன், 73; கொரோனா தொற்றால் காலமானார்.தமிழ், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த நுால்களை, தேடித்தேடி பதிப்பித்தவர் இளவழகன். தஞ்சை மாவட்டம், உறந்தராயன் குடிக்காட்டில் பிறந்தவர்.தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தன் சொத்துக்களை விற்று, தமிழின் அரிய சுவடிகள்,

சென்னை:பழந்தமிழ் நுால்களை தேடித்தேடி பதிப்பித்த, 'தமிழ் மண்' பதிப்பக உரிமையாளர், கோ.இளவழகன், 73; கொரோனா தொற்றால் காலமானார்.

தமிழ், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த நுால்களை, தேடித்தேடி பதிப்பித்தவர் இளவழகன். தஞ்சை மாவட்டம், உறந்தராயன் குடிக்காட்டில் பிறந்தவர்.தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தன் சொத்துக்களை விற்று, தமிழின் அரிய சுவடிகள், நுால்களை பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அவர், தமிழறிஞர்களான தேவநேய பாவாணர், கா.அப்பாத்துரை, ந.சி.கந்தையா, வெ.சாமிநாத சர்மா, திரு.வி.க., ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார். அவ்வை துரைசாமி பிள்ளை உள்ளிட்டோரின் நுால்கள்; கவிஞர்களான பாரதிதாசன், முடியரசன் உள்ளிட்டோரின் அனைத்து நுால்களையும் பதிப்பித்துள்ளார்.

இவை மட்டுமின்றி, மருத்துவ களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம், தமிழ் இலக்கண பேரகராதி, ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் உள்ளிட்ட அரிய நுால்களை பதிப்பித்தவர். கொரோனா தொற்றால், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X