பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்டப் பணி புதிய அரசுக்கு கோரிக்கை

Added : மே 04, 2021
Share
Advertisement
அன்னுார் : அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தில், விடுபட்ட நீர் நிலைகளை சேர்க்க வேண்டும் என, புதிய அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,044 குளம், குட்டைகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அன்னுார், எஸ்.எஸ்.குளம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம், சூலுார் ஒன்றியங்களில் ஆயிரம் குளங்களும்,

அன்னுார் : அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தில், விடுபட்ட நீர் நிலைகளை சேர்க்க வேண்டும் என, புதிய அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,044 குளம், குட்டைகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அன்னுார், எஸ்.எஸ்.குளம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம், சூலுார் ஒன்றியங்களில் ஆயிரம் குளங்களும், ஈரோடு மாவட்டம், பவானிசாகர், காவிலிபாளையம், நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 குளம், குட்டைகளும் விடுபட்டுள்ளன.விடுபட்ட நீர்நிலைகளை இரண்டாவது திட்டத்தில் சேர்க்க கோரிக்கை எழுந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சர்வே செய்து, அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.

ஆனால், அரசாணை வெளியாகவில்லை. புதிய அரசு, இரண்டாம் திட்டத்திற்கான அரசு ஆணை வெளியிட்டு உடனே பணிகளை துவக்க வேண்டும், என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X