பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் கற்பவர்களுக்கு மன ஆரோக்கிய விழிப்புணர்வு

Added : மே 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், ஜல்லிமேடுபுதுார் கிராமத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் இறுதியாண்டு மாணவிகளால், மன ஆரோக்கியம் மேம்பாடு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடி, 'ஆன்லைன்' வகுப்பில் படிக்கும் மாணவர்களின், மன ஆரோக்கியம் மேம்பட, தியானம் செய்தல்,

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், ஜல்லிமேடுபுதுார் கிராமத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் இறுதியாண்டு மாணவிகளால், மன ஆரோக்கியம் மேம்பாடு குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தபடி, 'ஆன்லைன்' வகுப்பில் படிக்கும் மாணவர்களின், மன ஆரோக்கியம் மேம்பட, தியானம் செய்தல், புத்தகம் படித்தல், ஓவியம் வரைதல், மொபைல் போன் பயன்பாட்டை குறைத்தல், உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும், மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், விளையாட்டுப் போட்டிகளும், பேச்சு திறனை வளர்க்க, பயிற்சி அளிக்கப்பட்டது.

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் போன்றவற்றை அமைக்க, மாணவர்கள் ஊக்குவிக்கப் பட்டனர். நிகழ்ச்சியில், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கினர். வேளாண் கல்லூரி மாணவர்களுடன், பொதுமக்கள் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X