பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலங்களில் கிருமிநாசினி தெளிப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
சூலுார் : சூலுாரில் உள்ள அரசு அலுவலகங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில், பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை முதல் பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகள், மதியம்,12:00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரவேண்டும்

சூலுார் : சூலுாரில் உள்ள அரசு அலுவலகங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில், பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாளை முதல் பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகள், மதியம்,12:00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரவேண்டும் என, உத்தரவு இடப்பட்டுள்ளது.இந்நிலையில், சூலுார் ஒன்றியத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது. தினமும் காலை நேரத்தில், அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பேரூராட்சி ஊழியர்கள், அங்கு, கிருமி நாசினி தெளிக்கின்றனர்.முன்வாயில், கதவு, ஜன்னல், கைப்பிடிகளுக்கு கிருமி நாசினி தெளித்து, சுத்தப்படுத்துகின்றனர். நேற்று, தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X