பொது செய்தி

தமிழ்நாடு

ஆள் இறங்கும் குழி சீரமைப்பு: அபாயம் நீங்கியதால் நிம்மதி

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து, ரயில்வே கேட் வழியாக ஜோதிநகர் செல்லும் ரோட்டில், தனியார் பள்ளி உள்ளது. முக்கிய வழித்தடமாக உள்ள இந்த ரோட்டில், தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஜோதிநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்கள், தனியார் பள்ளி மாணவர்கள் இவ்வழித்தடத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து, ரயில்வே கேட் வழியாக ஜோதிநகர் செல்லும் ரோட்டில், தனியார் பள்ளி உள்ளது. முக்கிய வழித்தடமாக உள்ள இந்த ரோட்டில், தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

ஜோதிநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்கள், தனியார் பள்ளி மாணவர்கள் இவ்வழித்தடத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. குழிகள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் விபத்துகள் ஏற்படுத்தும் இடமாக மாறியுள்ளது.தனியார் பள்ளி அருகே, குழாய் மூடி முறையாக மூடப்படாமல் மேலே பார்த்து இருந்ததால் விபத்துகள் சர்வசாதாரணமாக நடந்தது. கடந்த வாரம் இவ்வழியாக பைக்கில் சென்றவர், குழி மூடியில் மோதி கீழே விழுந்து காயமடைந்தார்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, அப்பகுதியில் சேதமடைந்த இரண்டு ஆள் இறங்கும் குழிகளையும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சீரமைத்தனர். பொதுமக்கள் கூறுகையில், 'ஜோதிநகர் பள்ளி அருகே விபத்து ஏற்படுத்தும் இடமாக இருந்த, ஆள் இறங்கும் குழிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இது போன்று, சேதமடைந்த குழிகளை கண்டறிந்து அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X