சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் குவியுது மணல் வாகன ஓட்டிகள் அவதி

Added : மே 04, 2021
Share
Advertisement
சூலுார், : திருச்சி ரோட்டில், நடுவில் குவிந்து கிடக்கும் மணலால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சூலுார் திருச்சி ரோட்டில், விரிவாக்க பணிகளுக்கு பின்னர், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப் பட்டன. காங்கயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி பிரிவு வரை இந்த கற்கள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக பராமரிப்பு பணிகளை செய்யாததால், சென்டர் மீடியனை ஒட்டி,

சூலுார், : திருச்சி ரோட்டில், நடுவில் குவிந்து கிடக்கும் மணலால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சூலுார் திருச்சி ரோட்டில், விரிவாக்க பணிகளுக்கு பின்னர், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப் பட்டன. காங்கயம்பாளையம் முதல் பாப்பம்பட்டி பிரிவு வரை இந்த கற்கள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக பராமரிப்பு பணிகளை செய்யாததால், சென்டர் மீடியனை ஒட்டி, மணல் குவிந்து கிடக்கிறது. இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறியதாவது: திருச்சி ரோடு விரிவாக்க பணி முடிந்த பின், சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டன. அதனால், ரோடு குறுகலானது. மணல், ஜல்லி கற்களுடன் லாரிகள் அதிகளவில் இந்த ரோட்டில் செல்கின்றன. பஸ் மற்றும் கன ரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால், மீடியன் கற்களை ஒட்டி மணல் குவிந்து கிடக்கிறது.புதிய பஸ்டாண்ட் எதிரில், மணலுடன் குப்பையும் குவிந்துள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது, மணலுடன் குப்பையும் பறக்கிறது. இந்ததக் குப்பையும் மணலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களுக்குக்குள் விழுவதால், அவர்கள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர்.வாகனங்களில் வருவோர் சறுக்கி விழுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், ரோட்டில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, வாகன ஓட்டிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X