பொது செய்தி

தமிழ்நாடு

எகிறியது பிளாட்பார்ம் கட்டணம் கொரோனா பரவலை தடுக்க யுக்தி

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால், ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கிய ரயில்கள், கடந்தாண்டு ஊரடங்கின் போது ரத்து செய்யப்பட்டன. தற்போது, அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இது வரை, மிக அதிகம் பயன்படுத்தப்படும் பொள்ளாச்சி -

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால், ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கிய ரயில்கள், கடந்தாண்டு ஊரடங்கின் போது ரத்து செய்யப்பட்டன. தற்போது, அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.இது வரை, மிக அதிகம் பயன்படுத்தப்படும் பொள்ளாச்சி - கோவை உள்ளிட்ட பயணியர் ரயில்கள் எதுவும் இயங்கவில்லை. இது, ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் வரை, 10 ரூபாய் இருந்த பிளாட்பார்ம் டிக்கெட், கடந்த, 1ம் தேதி முதல், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மிக அதிகம் என பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் வகையில், பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் இந்த கட்டண அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.வரும் மூன்று மாதங்களுக்கு இந்த கட்டணம் தொடரும். அதன் பின், குறைக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது. பயணிகளை தவிர, வழியனுப்ப வருபவர்கள் ஸ்டேஷனுக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X