சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகம் சூறை: 2 தி.மு.க.,வினர் 'சஸ்பெண்ட்'

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:சென்னையில், 'அம்மா' உணவகத்தை சூறையாடிய, தி.மு.க.,வினர், ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிந்து சூறையாடிய இருவரை கைது செய்தனர். சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், 'அம்மா உணவகம்' இயங்கி வருகிறது. இங்கு, 10 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை, தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம்
 அம்மா உணவகம் சூறை: 2 தி.மு.க.,வினர் 'சஸ்பெண்ட்'

சென்னை:சென்னையில், 'அம்மா' உணவகத்தை சூறையாடிய, தி.மு.க.,வினர், ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிந்து சூறையாடிய இருவரை கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், 'அம்மா உணவகம்' இயங்கி வருகிறது. இங்கு, 10 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை, தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். உணவகத்தில் சமைக்க வைத்திருந்த பொருட்களை துாக்கி வீசினர்.


'அலப்பறை'

'இனி எங்கள் ஆட்சி. நாளை முதல் கருணாநிதி, ஸ்டாலின் படம் தான் இருக்க வேண்டும்' என, எச்சரித்தனர். பின், அம்மா உணவகம் என்ற பெயரை அகற்றினர். தி.மு.க.,வினரின் இந்த, 'அலப்பறை' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''ஏழை மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது.

''மழை, வெள்ளம் பாதித்த காலம், கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து மக்களுக்கும் உணவளித்த, அம்மா உணவகத்தை சூறையாடிய சமூக விரோதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


ஸ்டாலின் அதிரடி

அம்மா உணவகத்தை சூறையாடியவர்களை கட்சியில் இருந்து நீக்கவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த பெயர் பலகை, பொருட்களை சீரமைக்கவும், ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இது குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., - மா.சுப்பிர மணியன் கூறியதாவது: மதுரவாயல் பகுதியில் உள்ள, அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த கட்சியினர் இருவர் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், இருவரையும் கட்சியில் இருந்து நீக்கவும், ஸ்டாலின் உடனே உத்தரவிட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

ஸ்டாலின் உத்தரவை அடுத்து, உணவகத்தில் சீரமைப்பு பணிகள் நடந்தன. முன்னதாக, தி.மு.க.,வினரால் துாக்கி வீசப்பட்ட, ஜெயலலிதா படத்தை, அ.தி.மு.க.,வினர் எடுத்து, சுவரில் மாட்டினர்.இதற்கிடையில், அம்மா உணவக ஊழியர்கள் கொடுத்த புகாரை அடுத்து, தி.மு.க., பிரமுகர்கள் நவசுந்தர், சுரேந்தர் ஆகியோரை, ஜெ.ஜெ., நகர் போலீசார் கைது செய்தனர்.


கண்டனம்

அம்மா உணவகம் சூறையாடப்பட்டதற்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி., - பா.ஜ., தலைவர் முருகன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட, பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனிடையே, பல இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில், ஜெ., படமும், அம்மா என்ற பெயரும் மறைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Laxman, Bahrain - Manama,பஹ்ரைன்
05-மே-202113:08:43 IST Report Abuse
Laxman, Bahrain புதிய முதல்வர் அவர்கள் தனது கட்சிக்காரர்களையும் மற்றும் உறவுகளையும் சற்று கண்டித்து நல்வழிப்படுத்தி ஆட்சி செய்தால், மக்கள் உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் கட்சி மீது உள்ள கறைகள் மறையும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-மே-202101:06:24 IST Report Abuse
தமிழவேல் முதல்வர் "அந்த" உணவகத்திற்கு சென்று வர வேண்டும். இது ஒரு நம்பிக்கையையும் கட்சி வெறியர்களுக்குள் ஒரு மாற்றமும் வரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X