பொது செய்தி

தமிழ்நாடு

தலைதுாக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு: நடவடிக்கை அவசியம்

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை நகரில், மளிகை மற்றும் காய்கறி கடைகளில், சர்வ சாதாரணமாக பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையை சமாளிக்க, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், ரோட்டில் மக்கள் நடமாட்டத்தையும், வாகன போக்குவரத்து எண்ணிக்கையை குறைக்க, மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளை, பகல், 12:00 மணி வரை மட்டுமே திறக்க

உடுமலை : உடுமலை நகரில், மளிகை மற்றும் காய்கறி கடைகளில், சர்வ சாதாரணமாக பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையை சமாளிக்க, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், ரோட்டில் மக்கள் நடமாட்டத்தையும், வாகன போக்குவரத்து எண்ணிக்கையை குறைக்க, மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளை, பகல், 12:00 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதேநேரம், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், உடுமலை நகரில், வியாபாரிகள் சிலர், மீண்டும் பிளாஸ்டிக் கப், பாலித்தீன் கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.மளிகை, காய்கறி கடைகளில், சர்வ சாதாரணமாக பாலித்தீன் பைகளில் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

சுகாதாரத்துறையினர், கொரோனா தடுப்பு பணியில் இருப்பதால், செய்வதறியாது திணறி வருகின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில், 2019ல், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய, பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, பெயரளவில் மட்டுமே அதிகாரிகள் செயல்பட்டனர்.இதுநாள் வரை, மறைமுகமாக பிளாஸ்டிக் கவர் பயன்பாடு இருந்தது. தற்போது, நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை.இத்தகைய விதிமீறலை தடுக்க துறை ரீதியான அதிகாரிகள் முன் வர வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X