அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு அறிவித்து மாதம் ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ்

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்து, மாதம், 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது. தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 952 என்ற, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தேர்தலின் போது பரவத் துவங்கிய கொரோனா வைரஸ்,

சென்னை:'கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்து, மாதம், 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது. தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 952 என்ற, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தேர்தலின் போது பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், இப்போது ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில், கடும் முழு ஊரடங்கு என்ற, கசப்பான முடிவை எடுப்பதை தவிர வேறு வழிஇல்லை.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு பொறுப்பேற்ற பிறகாவது, இதை செய்தாக வேண்டும். முதலில் இரு வாரங்களுக்கு கடும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி, பின் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் வாயிலாக, வைரஸ் பரவலை கட்டுப் படுத்த முடியும். ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை, அரசு தான் ஈடுகட்ட வேண்டும்.

அதற்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு, 5,000 ரூபாய் வீதம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க, தமிழக அரசு முன் வர வேண்டும். இதற்கான செலவில், சரிபாதியை மத்திய அரசிடம் போராடி பெறவும், மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X