பொது செய்தி

தமிழ்நாடு

சரணாலயம் அமையுமா? ஏழு குளங்களுக்கு வலசை வரும் பறவைகளுக்கு...நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை ஏழு குளங்களுக்கு, வலசை வரும் அரிய வகை பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க, பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். உடுமலை அருகே திருமூர்த்திமலையிலிருந்து அடுக்குத்தொடராக செங்குளம், பெரியகுளம், ஓட்டுக்குளம் உட்பட ஏழு குளங்கள் அமைந்துள்ளன. இந்த குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில்,

உடுமலை : உடுமலை ஏழு குளங்களுக்கு, வலசை வரும் அரிய வகை பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க, பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உடுமலை அருகே திருமூர்த்திமலையிலிருந்து அடுக்குத்தொடராக செங்குளம், பெரியகுளம், ஓட்டுக்குளம் உட்பட ஏழு குளங்கள் அமைந்துள்ளன. இந்த குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில், தண்ணீர் திறக்கப்பட்டு நிரப்பப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் இக்குளங்களில், தண்ணீர் நிரம்பியிருக்கும். போடிபட்டியில், 404 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பெரியகுளத்தின் நீர் தேக்க பரப்பில், பல வகையான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மரங்கள் மற்றும் தண்ணீர் நிறைந்த சூழல் காரணமாக, இக்குளத்திற்கு பல்வேறு வகையான அரிய வகை பறவைகள் வந்து செல்கின்றன.

ஏழு குள பகுதிக்கு வரும் பறவைகள் குறித்து, தன்னார்வ அமைப்புகள் சார்பில், முன்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், உள்நாட்டில், குறிப்பிட்ட மாதங்கள் இடம் பெயரும் தன்மையுள்ள, கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, வெண் கழுத்து நாரை, முக்குளிப்பான், தகைவிலான்குருவி, மீன்கொத்தி, ஆள்காட்டி, நீர்காகம், மடையான், செங்கால்நாரை, தாழைக்கோழி ஆகிய அரிய வகை பறவைகள், பெரியகுளத்தில், கோடை காலத்தில், குறிப்பிட்ட நாட்கள் முகாமிடுகின்றன.இவ்வாறு, முகாமிடும், பறவைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும், கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

இதனால், பெரியகுளம், சுற்றுச்சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது என இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இடம் பெயரும் பறவைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவற்றின் வாழ்விடமான, பெரியகுள நீர் தேக்க பரப்பில், பல்வேறு இடையூறுகள் பறவைகளுக்கு ஏற்படுத்தப்படுகின்றன.குறிப்பாக, தண்ணீர் அளவு குறையும் போது, மரங்கள் கூடு கட்டும், மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், பிற பகுதிகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக இடம் பெயர்ந்து வரும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.குறிப்பிட்ட காலத்தில், இனப்பெயர்ச்சி பாதிக்கப்பட்டால், பறவைகளின் வாழ்வியல் சுழற்சி கடுமையாக பாதிக்கும் என, இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பெரியகுளத்தின் கரைகளில், இரவு நேரங்களில், சமூக விரோதிகள், மது அருந்துவது உட்பட செயல்களாலும், பறவைகள் பாதிக்கப்படுகின்றன. குளத்தின் வண்டல் மண் அதிகளவு அள்ளப்படுவதால், புதிய மரங்கள் வளர்வதும் தடையாகிறது.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: பெரியகுளம் மற்றும் செங்குளத்திற்கு, இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே குளங்களில் மரங்களை வெட்டுவதை தடை செய்ய வேண்டும்.மேலும், பாதுகாவலர் நியமித்து, சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். பறவைகள் சரணாலயமாக அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்தால், அரிய வகை பறவைகளை பாதுகாக்க உதவும். இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X