அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று மாநிலம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் முருகன், விடுத்த அறிக்கை:மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., எழுச்சிமிக்க வெற்றியை பெற்றது. நந்திகிராம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம், முதல்வர் மம்தா

சென்னை:மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று மாநிலம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன், விடுத்த அறிக்கை:மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., எழுச்சிமிக்க வெற்றியை பெற்றது. நந்திகிராம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம், முதல்வர் மம்தா பானர்ஜி தோற்றார்.பா.ஜ.,வின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு, எரிச்சல் அடைந்துள்ள மம்தா பானர்ஜி, அவருடைய கட்சி குண்டர்களை வைத்து, மேற்கு வங்கத்தில், வன்முறை வெறியாட்டத்தை துவக்கியிருக்கிறார். இதுவரை, பா.ஜ., தொண்டர்கள், ஆறு பேர் பலியாகி உள்ளனர்.

இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து, இன்று மேற்கு வங்கம், கோல்கட்டாவில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைகளை கண்டித்தும், பா.ஜ.,வினர் மீது நடத்துகிற தாக்குதலை கண்டித்தும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாவட்ட, மண்டல நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.

அந்த பகுதிகளில் இருக்க கூடிய முக்கிய தலைவர்களை, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க செய்திட வேண்டும். தமிழகத்தில் நாம் எழுப்புகிற குரல், நாடு முழுதும் எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X