அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனபாலுக்கு எங்கு கூடுதல் ஓட்டு?

Added : மே 04, 2021
Share
Advertisement
அன்னுார் : அவிநாசி தொகுதியில் தனபாலுக்கு எந்தெந்த பகுதிகளில், அதிக ஓட்டுகள் கிடைத்தன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவிநாசி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்ட தனபால், 51 ஆயிரத்து 161 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்நிலையில், 401 ஓட்டுச் சாவடிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் மற்றும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான ஆதித்தமிழர்

அன்னுார் : அவிநாசி தொகுதியில் தனபாலுக்கு எந்தெந்த பகுதிகளில், அதிக ஓட்டுகள் கிடைத்தன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவிநாசி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட்ட தனபால், 51 ஆயிரத்து 161 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்நிலையில், 401 ஓட்டுச் சாவடிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர் தனபால் மற்றும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான ஆதித்தமிழர் பேரவையின் அதியமான் ஆகியோர் பெற்ற, ஓட்டுகள் விபரம் வெளியாகியுள்ளது.இதில், அவிநாசி ஒன்றியத்தில், 31 ஊராட்சிகள், இரு பேரூராட்சிகளில், 35 ஆயிரத்து 810 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

அன்னுார் ஒன்றியத்தில் ஒரு பேரூராட்சி 21 ஊராட்சிகளில், 15 ஆயிரத்து 351 ஓட்டுகள் மட்டுமே தனபால் அதியமானை விட கூடுதலாக பெற்றுள்ளார். அன்னுார் தெற்கு ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், குன்னத்துார், பிள்ளையப்பம் பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், கரியாம்பாளையம், காரேகவுண்டன்பாளையம், வடவள்ளி ஆகிய பத்து ஊராட்சிகளில் தனபால், அதியமானை விட 7,545 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.அன்னுார் பேரூராட்சியில் தனபால், தி.மு.க.,வேட்பாளரை விட, 1,694 ஓட்டுகள் கூடுதலாக பெற்று உள்ளார்.

அன்னுார் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகளிலும் சேர்த்து, தனபால் 6,112 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.அன்னுார் ஒன்றியத்தை விட, அவிநாசி ஒன்றியத்தில்தான், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X