பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் வியாபாரம் முடக்கம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வணிக கடைகள் பூட்டப்பட்டு வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி, அமாவாசை, விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பக்தர்களுக்கு

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வணிக கடைகள் பூட்டப்பட்டு வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி, அமாவாசை, விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பக்தர்களுக்கு பூஜைப்பொருட்கள் விற்பதற்காக, 70க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. இதில், தனியார் மற்றும் அரசு கட்டடங்களை வாடகைக்கு எடுத்து, பூஜை பொருட்கள் விற்பனை செய்து வந்தனர்.கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழிபாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாசாணியம்மன் கோவில் செல்லும் வழியிலுள்ள கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது.

கடைக்காரர்கள் கூறியதாவது:கடந்தாண்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கோவில்கள் பூட்டப்பட்ட போது பெரும் சிரமத்துக்கு உள்ளானோம். பல மாதங்கள் வருமானமின்றி கடும் நெருடிக்கடியில் வாழ்க்கையை நகர்த்தினோம். தற்போது, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகளை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எங்கள் வாழ்வாதாரம் காக்க, கடை வைத்திருந்தவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியாரிடம் வாடகைக்கு கடை எடுத்துள்ள எங்களுக்கு, கடை திறக்கும் வரையில் வாடகை வசூலிக்காமல் விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X