பொது செய்தி

தமிழ்நாடு

இடியுடன் மிதமான மழை 

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : அக்னி நட்சத்திரத்தின் துவக்க நாளான நேற்று, கிணத்துக்கடவு பகுதியில், இடியுடன் மிதமான மழை பெய்தது. அதிகபட்ச வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் அக்னி நட்சத்திர காலம் நேற்று துவங்கியது. ஏற்கனவே, வெயில் சுட்டெரிக்கும் நிலையில், நேற்று பகல், 1:00 மணிக்கு, கிணத்துக்கடவு ஒன்றியத்தின் கிழக்குப்பகுதியில், பனப்பட்டி, காட்டம்பட்டி, மன்றாம்பாளையம், வடசித்துார்,

பொள்ளாச்சி : அக்னி நட்சத்திரத்தின் துவக்க நாளான நேற்று, கிணத்துக்கடவு பகுதியில், இடியுடன் மிதமான மழை பெய்தது.

அதிகபட்ச வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் அக்னி நட்சத்திர காலம் நேற்று துவங்கியது. ஏற்கனவே, வெயில் சுட்டெரிக்கும் நிலையில், நேற்று பகல், 1:00 மணிக்கு, கிணத்துக்கடவு ஒன்றியத்தின் கிழக்குப்பகுதியில், பனப்பட்டி, காட்டம்பட்டி, மன்றாம்பாளையம், வடசித்துார், காரச்சேரி மற்றும் அரசம்பாளையம் பகுதியில், திடீரென இடியுடன் மழை பெய்தது. கிழக்குப்பகுதியில் சற்று பலமாகவும், மேற்கு பகுதியில் துாறலாகவும் மழை பெய்தது. ஏற்கனவே, கடந்த, 15 நாட்களுக்கு முன் பெய்த மழையின் ஈரத்தை பயன்படுத்தி, விதைப்பு மேற்கொண்டு முளைப்புக்காக மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X