சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் திருடர்கள் சிக்கினர்

Added : மே 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே மொபைல் போன் திருட முயன்ற நபர்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து, தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் அஜித்குமார், 30; லாரி டிரைவர்.நேற்று காலை, துடியலுார் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், அஜித்குமார் கையில் இருந்த போனை

பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே மொபைல் போன் திருட முயன்ற நபர்களை, பொதுமக்கள் சுற்றி வளைத்து, தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் அஜித்குமார், 30; லாரி டிரைவர்.நேற்று காலை, துடியலுார் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், அஜித்குமார் கையில் இருந்த போனை பிடுங்கினர்.சுதாரித்த, அஜித்குமார் பைக்கின் பின்புறம் அமர்ந்த நபரை பிடித்து இழுத்தார். பைக்கில் இருந்து, இருவரும் கீழே விழுந்தனர். அவர்களை, அப்பகுதி பொதுமக்கள் சுற்றிவளைத்து, தர்மஅடி கொடுத்து, துடியலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திருப்பூர், நெசவாளர் காலனியை சேர்ந்த நாகராஜ், 19, அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 18, என தெரியவந்தது. இருவரும் கோவை கணபதியில் உள்ள தனது உறவினரை பார்த்துவிட்டு திரும்பும்போது, மொபைல் போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X