சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல் ரூ.1 லட்சம் அபராதம்

Added : மே 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : துடியலுார் வட்டாரத்தில் முகக்கவசம் அணியாமல், நடமாடிய நபர்களிடமிருந்து, ஒரு லட்சத்து, 2,400 ரூபாயை, போலீசார், அபராதமாக வசூலித்துள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்த, போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.முகக்கவசம் அணியாமல், பொது இடங்களில் நடமாடும் நபர்களிடம், 200 ரூபாய் அபராதமாக

பெ.நா.பாளையம் : துடியலுார் வட்டாரத்தில் முகக்கவசம் அணியாமல், நடமாடிய நபர்களிடமிருந்து, ஒரு லட்சத்து, 2,400 ரூபாயை, போலீசார், அபராதமாக வசூலித்துள்ளனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்த, போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.முகக்கவசம் அணியாமல், பொது இடங்களில் நடமாடும் நபர்களிடம், 200 ரூபாய் அபராதமாக போலீசார் வசூலிக்கின்றனர்.துடியலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட என்.ஜிஜி.ஒ., காலனி, துடியலுார் பஸ் ஸ்டாண்ட், கவுண்டம்பாளையம், தடாகம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடந்த ஒரு மாதத்தில் முகக்கவசம் அணியாத, 512 நபர்களிடமிருந்து ஒரு லட்சத்து, 2,400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் துடியலுார் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X