அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: ஸ்டாலின் வேண்டுகோள்

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா நோய் பரவல் தடுப்பை, மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்' என, முதல்வராக பதவியேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டு உள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற, வேண்டுகோளை முன் வைத்துக் கொள்கிறேன்.கொரோனா இரண்டாவது அலை என்பது,

சென்னை:'கொரோனா நோய் பரவல் தடுப்பை, மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்' என, முதல்வராக பதவியேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப் பட்டு உள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற, வேண்டுகோளை முன் வைத்துக் கொள்கிறேன்.கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையை விட மிக மோசமானதாக இருக்கிறது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த துயர்மிகு நிலையை, மக்கள் அனைவரும் முதலில் உணர வேண்டும்.குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. அங்கு, நுாற்றுக் கணக்கான மரணங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், மக்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல, அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பது என்பது, வேகமான கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடும். அதனால், அரசின் கட்டுப்பாடுகளை, கட்டுப்பாடுகளாக இல்லாமல், மக்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும். இதை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதி செய்திட இயலும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X