அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்துடன் உதயநிதி சந்திப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்த உதயநிதி, தேர்தல் வெற்றிக்காக, அவரிடம் ஆசி பெற்றார்.சென்னை, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, அவர் வாழ்த்து பெற்று வந்தார். திடீரென விருகம்பாக்கத்தில் உள்ள, தே.மு.தி.க.,

சென்னை:விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரித்த உதயநிதி, தேர்தல் வெற்றிக்காக, அவரிடம் ஆசி பெற்றார்.

சென்னை, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து, அவர் வாழ்த்து பெற்று வந்தார். திடீரென விருகம்பாக்கத்தில் உள்ள, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார். அங்கு விஜயகாந்தை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ஆசி பெற்றார்.

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்துக்கு, உதயநிதி நன்றியும் கூறினார். விஜயகாந்த் உடல்நலம் குறித்தும், அவர் விசாரித்தார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், மகன் விஜயபிரபாகரனுடன், 10 நிமிடங்கள் பேசி விட்டு, உதயநிதி அங்கிருந்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X