பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை மையமாக தனியார் பள்ளி விடுதி மாற்றம்

Added : மே 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : காரமடையில் தனியார் பள்ளி விடுதி, கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள், காரமடை சாலையில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ., ஆகிய மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு

மேட்டுப்பாளையம் : காரமடையில் தனியார் பள்ளி விடுதி, கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள், காரமடை சாலையில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ., ஆகிய மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வந்தனர்.கோவையில் பெரும்பாலான மருத்துவ மனைகளில், படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் ஆகியோர், காரமடையில் தனியார் பள்ளி விடுதியை பார்வையிட்டு, சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற, ஒப்புதல் அளித்தனர்.

போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நேற்று மாலை வரை, 44 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். நேற்று காரமடையில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை, 37 ஆக இருந்தது.அன்னுாரில் தொற்றுஅன்னுார் பேரூராட்சியில், குமாரபாளையம், ஆசாத் வீதி, அவிநாசி ரோடு, மெயின் ரோடு, ஏ.எம்.காலனியில் ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. கிராமப்பகுதியில், முடுக்கன்துறை, பொகலுார், அச்சம்பாளையம், பச்சாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 9 பேருக்கு என மொத்தம், 14 பேருக்கு தோற்று உறுதியானது. அன்னுார் ஒன்றியத்தில்தற்போது 131 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X