பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் பகுதிகளில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

Added : மே 04, 2021
Share
Advertisement
சூலுார், நரசிம்ம நாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை புறநகர்ப் பகுதிகளில், நேற்று திடீர் மழை பெய்து, விவசாயிகளை இன்ப அதிச்சியில் ஆழ்த்தியது. சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதலே வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மாலை, 6:00 மணிக்கு லேசான துாறலுடன் துவங்கிய மழை பின்னர் வேகமெடுத்தது. சுமார், ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்பட்டது. இதனால்,

சூலுார், நரசிம்ம நாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை புறநகர்ப் பகுதிகளில், நேற்று திடீர் மழை பெய்து, விவசாயிகளை இன்ப அதிச்சியில் ஆழ்த்தியது.

சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதலே வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மாலை, 6:00 மணிக்கு லேசான துாறலுடன் துவங்கிய மழை பின்னர் வேகமெடுத்தது. சுமார், ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.நரசிம்மநாயக்கன்பாளையம்கடந்த சில நாட்களாக, கோவை வடக்கு பகுதியில், கடும் வெப்பம் நிலவியது. நேற்று காலை முதல் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வானம் மேகமூட்டமாக இருந்தது. இரவு, 7:00 மணி அளவில், அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' கோடை உழவு செய்துள்ளோம். மழையை எதிர்பார்த்திருந்தோம். நேற்று சிறிது நேரம் மழை பெய்தது மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்தால் தான் காய்ந்து கிடக்கும் விளை நிலங்களில் மழைநீர் இறங்கும். அப்போதுதான் பயிரிட ஏதுவாக இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X