அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னரை சந்தித்து உரிமை கோரினார் ஸ்டாலின்

Updated : மே 05, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (28+ 11)
Share
Advertisement
சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று (மே.5) காலை அவர் எம்எல்ஏ.,க்களின் ஆதரவு கடிதம் மற்றும் அவர் திமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்ட்ட கடிதத்தையும் ஸ்டாலின் கவர்னரிடம் வழங்கினார். சென்னை அறிவாலயத்தில், நேற்று மாலையில் நடந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை தி.மு.க., தலைவராக,
DMK, MK Stalin, Stalin

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று (மே.5) காலை அவர் எம்எல்ஏ.,க்களின் ஆதரவு கடிதம் மற்றும் அவர் திமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்ட்ட கடிதத்தையும் ஸ்டாலின் கவர்னரிடம் வழங்கினார்.சென்னை அறிவாலயத்தில், நேற்று மாலையில் நடந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், முதல்வராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதற்கான, ஆதரவு கடிதங்களை, எம்.எல்.ஏ.,க்கள் வழங்கினர்.


159 தொகுதிகளில்


தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நடந்தது. மே, 2ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., - 125, காங்கிரஸ் - 18, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 4, ம.தி.மு.க., - 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமை கட்சி - 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - 1 என, மொத்தம், 159 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அறிவாலயத்தில், நேற்று மாலை ஸ்டாலின் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 125 பேருடன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட, கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எட்டு பேர் உட்பட, மொத்தம், 133 பேர் பங்கேற்றனர்.


சம்பிரதாயம்


கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்று பேசினார். அவரை தொடர்ந்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேசுகையில், ''சட்டசபை தலைவராக தேர்ந்தெடுப்பவரை, முதல்வராக, கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். ''இது, ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல, சட்டமும் கூட. அந்த அடிப்படையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, சட்டசபை கட்சி தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தேர்வு செய்துள்ளோம்,'' என்றார். ஸ்டாலின் முதல்வராவதற்கான ஆதரவு கடிதங்களை, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வழங்கினர்.

இதையடுத்து, ஸ்டாலினுக்கு, நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.,க்களும் நீண்ட வரிசையில் நின்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பொன்னாடை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். இன்று சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு, ஸ்டாலின் செல்கிறார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். அவரது கோரிக்கையை கவர்னர் ஏற்று, ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். அதை தொடர்ந்து, நாளை மறுநாள், கவர்னர் மாளிகையில், முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். கொரோனா பரவல் காரணமாக, பதவி ஏற்பு விழா, எளிமையாக நடைபெறஉள்ளது. தமிழகத்தில், ஆறாவது முறையாக, தி.மு.க.,வின் ஆட்சி அமைய உள்ளது.


பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரம்


முதல்வர் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.தமிழக முதல்வராக, வரும், 7ம் தேதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், கவர்னர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடக்கும் என, அவர் அறிவித்து உள்ளார்.பதவியேற்பு விழா ஏற்பாடு கள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று, தலைமை செயலகத்தில் நடந்தது. தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன் தலைமை வகித்தார். டி.ஜி.பி., திரிபாதி, கவர்னரின் செயலர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல், சட்டசபை செயலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பதவியேற்பு விழாவை நடத்துவது; விழாவிற்கு எத்தனை பேரை அழைப்பது; யாருக்கெல்லாம் அழைப்பு கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதே நேரம், கவர்னர் மாளிகையில், பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.


கலெக்டர்களுடன்


அத்துடன், கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, வருவாய் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர் ரெட்டி, நிர்வாக துணை தலைவர் நீரஜ்மிட்டல், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய தலைமை செயலர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, அனைத்து மாவட்டங்களிலும், தீவிரப்படுத்தும்படி, கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (28+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
05-மே-202119:14:19 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. மாநில உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மே,வ ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா. ஜ. க. வை உதிக்கும் கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும். மூவருக்கும் வாழ்த்துகள்.கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மத்திய அரசின் மாநில நலனுக்கு முரணான திட்டங்களுக்கு இவர்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புவோம். தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த அனைத்து முதல்வர்களும் (ஓ பி எஸ் & ஈ பி எஸ்) மாநில நலனில் கட்சி வேறுபாடின்றி தமிழக உரிமைகளுக்கு குரல் எழுப்பியுள்ளனர். புதிய முதல்வர் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழக உரிமைகளை காக்க வேண்டும். குறிப்பாக மாநில வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டங்களை களைய வேண்டும். திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
05-மே-202118:48:59 IST Report Abuse
Balasubramanyan He doesnot like governor. Always criticized him. He wants YES GOVERNORAND A PERSON SITS AND WATCHING TV AT RAJ BHAVAN. TO GIVE CORRUPTION CHARGES INSTEAD OG GOING TO COURT WENT TO GOVERNOR.NOW WITHOUT SHAME WENT TO RAJBHAVAN TO CLAIM CM POST. THANMANA SINGAM.
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
05-மே-202118:13:16 IST Report Abuse
N.K தமிழ்நாடு இனி ஐந்து வருடங்கள் தாக்குபிடிப்பது கடினம். நம் மாநிலம் காக்கப்படவேண்டும் என்றால், குடும்ப ஆதிக்கம் பொறுக்காமல் திமுகாவில் இன்னொரு அணி உருவாகி, கட்சி உடைந்து ஆட்சி பறிபோனால் தான் உண்டு. இது நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆட்டம், அராஜகம் அதிகமானால் இதுவும் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X